கொரோனா வைரஸ், பாதிப்பு தமிழகத்தில் அதிகமாவதை தடுக்க, தற்போது 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 31 ஆம் தேதி வரை, போடட்ட இந்த தடை மேலும் 21 நாட்கள் நீடிக்கும் என பாரத பிரதமர் மோடி நேற்று அவர் நிகழ்த்திய உரையில் தெரிவித்தார் .

படப்பிடிப்பு பணிகள் மற்றும் சீரியல் தயாரிப்பு பணிகள் முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால், பெப்சி தொழிலாளர்கள் வேலை இன்றி கஷ்டப்பட்டு வருவதாக பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி வெளியிட அறிக்கையில் உருக்கமாக தெரிவித்தார்.

இதையடுத்து திரையுலகை சேர்த்த பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதி உதவிகளையும், அரிசி போன்ற பொருட்களையும் கொடுத்து பெப்சி ஊழியர்களுக்கு உதவி வருகிறார்கள்.

சூர்யா 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் 50 லட்சம், நடிகர் விஜய் சேதுபதி 10 லட்சம் ரூபாய், என ஒருபக்கம் நிதி உதவி குவிந்து வரும் நிலையில், கலைப்புலி எஸ் தாணு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், போன்றவர்கள் அரிசி மூட்டைகளை கொடுத்து பெப்சி தொழிலாளர்களின் பசியை போக்க உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.