Asianet News TamilAsianet News Tamil

டாப்லெஸ் கவர்ச்சி... கழுத்தில் விநாயகர்! புதிய சர்ச்சையில் சிக்கிய ரிஹானா!

இந்து கடவுளின் டாலர் அணிந்து, வெளியிட்டுள்ள புகைப்படம்,  இந்து மக்களின் மனதை புண் படுத்தும் விதத்தில் உள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

pop singer rihana topless photo create new issue
Author
Chennai, First Published Feb 17, 2021, 4:26 PM IST

உலகப் புகழ்பெற்ற பாப் ஸ்டார் ரிஹானா ஏற்கனவே இந்திய விவசாயிகள் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது அரை நிர்வாண உடையில் இந்து கடவுளின் டாலர் அணிந்து, வெளியிட்டுள்ள புகைப்படம்,  இந்து மக்களின் மனதை புண் படுத்தும் விதத்தில் உள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

pop singer rihana topless photo create new issue

அமெரிக்காவை சேர்ந்த, உலக புகழ் பெற்ற பாப் பாடகி ரிஹானா... தற்போது மேலாடை ஏதும் அணியாமல், குட்டையான, ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கழுத்தில், இந்துக்களின் முன் முதல் கடவுளான விநாயகரின் உருவத்துடன் கூடிய, 'டாலர்' ஒன்றை அணிந்துள்ளார்.

pop singer rihana topless photo create new issue

இது தான் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. ஹிந்து கடவுள் விநாயகரை அவமதிக்கும் விதமாக இவரது செயல்கள் இருப்பதாகவும், இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் உள்ளதால், ரிஹானா இதற்க்கு மன்னிப்பு கூற வேண்டும் என சமூக வலைத்தளத்தில் பலர் கொந்தளித்து வருகிறார்கள்.  சமீபத்தில் தான் இவர் ஒரு சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதற்குள் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios