'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், நாளை இந்த படத்தின் லுக் அவுட் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
எம்ஜிஆர், கமலஹாசன், போன்ற ஜாம்பவான்கள் எடுக்க ஆசைப்பட்ட திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. அமரர் கல்கி, சோழ மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை புனையப்பட்ட கதையாக எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக, எடுக்க பலர் முயற்சி செய்த நிலையில், ஒரு சில காரணங்களால் அது கனவாகவே மாறிப்போனது.
ஆனால் இயக்குனர் மணிரத்தினம் விடாப்பிடியாக இருந்து, 'பொன்னியின் செல்வன்' நாவலை இரண்டு பாகமாக இயக்கியுள்ளார். கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, பார்த்திபன், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, அசோக் செல்வன், ரகுமான், போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி உள்ள இந்தப்படத்தின் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், முதல் பாகத்திலேயே இந்த படத்திற்காக செலவு செய்யப்பட்ட 500 கோடி வசூல் செய்தது படக்குழு.

நடிகை தன்யா பாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டது உண்மை தான்! இயக்குனர் பாலாஜி மோகன் தகவல்!
இதைத்தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், போஸ் ப்ரோடுக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நாளை மாலை 4 மணிக்கு 'பொன்னியின் செல்வன்' படத்தின் லுக் அவுட் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்போதே இரண்டாம் பாகத்திற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக துவங்கி நடந்து வரும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்குள்ளாகவே 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் வெளியாக வாய்ப்புள்ளது. மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தை லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
