MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சல்மான் கான் செய்த துரோகம்! அடுத்த நொடியே காதலை முறித்து கொண்ட சங்கீதா! அசாருதீனை திருமணம் செய்தது ஏன்?

சல்மான் கான் செய்த துரோகம்! அடுத்த நொடியே காதலை முறித்து கொண்ட சங்கீதா! அசாருதீனை திருமணம் செய்தது ஏன்?

நடிகையும் மாடலுமான சங்கீதா பிஜ்லானி, சல்மான் கானுடனான காதலை முறித்து கொண்டு, கிரிக்கெட் வீரர் அசாருதீனை திருமணம் செய்து கொண்டது குறித்த தகவல் மீண்டும்  சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 27 2022, 04:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

நடிகர் சல்மான் கான் இன்று  தன்னுடைய 57-ஆவது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார். வழக்கம் போல் தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு பாலிவுட் திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் சல்மான் கான் அழைப்பு விடுத்த நிலையில், இந்த முறை சல்மான் கானின் முன்னாள் காதலை சங்கீதா பிஜ்லானி கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

28

மேலும் சல்மான் காணும் அவரை வழியனுப்பும் போது... அவருடைய நெற்றியில் முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்தார். இந்நிலையில், சல்மான் கான் மற்றும் சங்கீதா பிஜ்லானி இருவரும் உருகி உருகி காதலித்த நிலையில், இருவரும் ஏன் பிரிந்தனர் என்பது பற்றி தகவல் சமூக வலைத்தளத்தில் வட்டமடித்து வருகிறது.

38

சங்கீதா பிஜ்லானி 80 மற்றும் 90 களில் முன்னணி மாடலாகவும், முன்னணி நடிகையாகவும் இருந்தவர். நடிகர் சல்மான் கானுடன் மிகவும் வலுவான காதலில் இருந்ததால்... அப்போது இவர்கள் இருவரும் திருமணம்  செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவின. சங்கீதாவின் உறுதியான காதலை சிதற செய்தது, சல்மான் கான் இவருக்கு செய்த துரோகம் தான்.

48

பாலிவுட் ஃபிளே பாய்யான இவர், நடிகை சோமி அலியுடன் டேட்டிங் செய்வதை அறிந்த சங்கீதா சல்மான் கானை பிரேக் அப் செய்து பிரிந்தார். மேலும் நீண்ட நாள் காதலர் செய்த துரோகத்தை நினைத்து மன அழுத்தத்தில் இருந்த இவர், அதில் இருந்து விடுபட... தன்னுடைய நண்பர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

58

அப்போது சங்கீதாவிற்கு அறிமுகமானவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், விளையாட்டு வீரருமான அசாருதீன். நட்பாக துவங்கிய இவர்களின் அறிமுகம் பின்னர் காதலாக மாறியது. சங்கீதா திருமணமாகாதவர் தான், ஆனால் அசாருதீனுக்கு, நவ்க்ரீன் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.

68

சங்கீதாவை பிஜ்லானியை திருமணம் செய்து கொள்ள முதல் மனைவியை விவாகரத்து செய்த அசாருதீன், ஜீவனாம்சமாக பெரும் தொகையை முதல் மனைவிக்கு கொடுத்ததாக கூறப்பட்டது. மேலும் சங்கீதா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததாகவும், இதன் காரணமாகவே இருவரும் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியது.

78

அஸாருதீனை திருமணம் செய்து கொள்ள, சங்கீதா பிஜ்லானி... முஸ்லீம் மதத்திற்கு மாறனார். விடாப்பிடியாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். முறையாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தாலும் தற்போது வரை இருவரும், நல்ல நட்புடனே உள்ளதாக கூறப்படுகிறது. 
 

88

சல்மான் கான் மற்றும் சங்கீதா பிஜ்லானி காதல் உறவு முறிந்து பல வருடங்கள் ஆகும் நிலையில், திடீர் என இவர் சல்மான் கான் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டதும், சங்கீதாவுக்கு முத்தம் கொடுத்து சல்மான் கான் வழியனுப்பியதும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சல்மான் கான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved