இயக்குனர் பாலாஜி மோகன் நடிகை தன்யா பாலகிருஷ்ணனை, திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் கூறியிருந்த நிலையில், திருமணம் ஆனது உண்மைதான் என என்பதை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார் பாலாஜி மோகன். 

தமிழ் சினிமாவில் 'ஏழாம் அறிவு' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தன்யா பாலகிருஷ்ணன். இந்த படத்தை தொடர்ந்து, காதலின் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழியை விட தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வரும் தன்யா பாலகிருஷ்ணன், 'காதலின் சொதப்புவது எப்படி', 'வாயை மூடி பேசவும்', 'மாரி', 'மாரி 2' போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குனர் பாலாஜி மோகனை, ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு வெப் சீரிஸ்களில் நடித்து வரும் நடிகை கல்பிகா கணேஷ் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமணம் ஆகி ஒருவருடம் ஆகும் நிலையில், இந்த ஜோடி திருமணத்தை மறைத்து வருவதாகவும் தற்போது தனியா பாலகிருஷ்ணன், தெலுங்கு மற்றும் கன்னட பட ப்ரமோஷன்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கும் அவருடைய கணவர் பாலாஜி மோகன்தான் காரணம் என்பது போல கூறி இருந்தார். கல்பிகா கணேஷின் இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், அந்த வீடியோவை தன்யா மற்றும் பாலாஜி மோகன் இருவரும் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி நீக்கி விட்டதாகவும் குற்றம்ச்சாட்டி இருந்தார்.

சல்மான் கான் செய்த துரோகம்! அடுத்த நொடியே காதலை முறித்து கொண்ட சங்கீதா! அசாருதீனை திருமணம் செய்தது ஏன்?

இந்த தகவல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ளார் இயக்குனர் பாலாஜி மோகன். இதில் தன்யா பாலகிருஷ்ணன் தன்னுடைய மனைவி என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளது மட்டும் இன்றி, தங்களுடைய சொந்த வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசி வரும், கல்பிகா கணேஷ் தங்களை பற்றி பேச தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளார்.

மகனின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடிய யோகிபாபு... அமைச்சர், திரைப்பிரபலங்கள் பங்கேற்பு - வைரலாகும் போட்டோஸ்

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலாஜி மோகன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, "நான் காதலில் சொதப்புவது எப்படி, மாரி 2, உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளேன், 'ஏழாம் அறிவு', 'ராஜா ராணி', உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணனை, கடந்த ஜனவரி 23ஆம் தேதி திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில் வெப் சீரியஸ்களில் நடிக்கும், தெலுங்கானாவை சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் என்பவர் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து youtube இல் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரும் கல்பிகா கணேசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தங்களைப் பற்றி அவதூறு கருத்து வெளியிதற்காக ரூபாய் ஒரு கோடி ரூபாய் அவர் இழப்பீடு தர வேண்டும் என கூறி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணன் குறித்து கருத்து தெரிவிக்க கல்பிகா கணேஷுக்கு தடை விதித்துள்ளது மட்டும் இன்றி, இந்த மனுவுக்கு ஜனவரி 20 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 

அட்ராசக்க... டல் அடிக்கும் டி.ஆர்.பி-யை எகிற வைக்க பிக்பாஸ் அறிவித்த பலே டாஸ்க் - வைரலாகும் புரோமோ இதோ

கல்பிகா கணேஷ் எழுப்பிய பிரச்சனையின் காரணமாக, திருமணம் ஆகி 11 மாதங்கள் ஆன பின்னர் பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணன்.. திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.