தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீரழித்து விட்டு  ஏமாற்றியதாக காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு அவ்வப்போது சீமானுக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை விஜயலட்சுமி. இந்நிலையில் கடந்த 26ம் தேதி  திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றார்.

 

இதையும் படிங்க: ராஜமாதா கெட்டப்பில் வனிதா... தீயாய் பரவும் போட்டோவை பார்த்து கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி தற்கொலை முயற்சிக்கு முன்னதாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சீமானுக்கு எதிராக நீதி கேட்டு பலரிடம் போராடியதாகவும், ஆனால் யாரும் தனக்கு உதவ முன்வரவில்லை என்றும் உருக்கமாக தெரிவித்திருந்தார். மேலும் தன்னை விபாச்சாரி போன்ற வார்த்தைகளால் சீமான் கட்சியைச் சேர்ந்தவர்கள் தரக்குறைவாக பேசுவதாகவும், சீமானின் தொடர் டார்ச்சர்கள் தாங்காமல் தற்கொலைக்கு செய்து கொள்ள போவதாகவும், இதுவே தனது கடைசி வீடியோ என்றும் தெரிவித்திருந்தார்.

அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து  வீடு திரும்பிய விஜயலட்சுமி நேற்று மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபடுவதாக வந்த நடிகை விஜயலட்சுமிக்கு போலீசார் அனுமதி அளித்தனர். 

 

இதையும் படிங்க: எனக்கு ஏதாவது நடந்தால் விஜய், சூர்யா தான் பொறுப்பு... ஆபாச மெசெஜ்களால் அலறும் மீரா மிதுன்...!

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஜயலட்சுமி, தனக்கு பாஜகவினர் யாரும் உதவ வேண்டாம் என்றும், சீமானும், ஹரி நாடாரும் தன்னிடம் இதுவரை சமரசம் பேச வரவில்லை என்றும் குற்றச்சாட்டினார். சீமானையும், ஹரி நாடாரையும் போலீசார் கைது செய்யாததால் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வீட்டிற்குள்ளேயே உண்ணாவிரதம் இருக்க போவதாகவும், தனக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.