ராஜமாதா கெட்டப்பில் வனிதா... தீயாய் பரவும் போட்டோவை பார்த்து கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்...!
பிக்பாஸ் வனிதா மீது அன்பை பொழிந்து வந்த ரசிகர்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் பீட்டர் பால் பிரச்சனையால் பேக் அடிக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக வனிதா ஷேர் செய்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கண்டபடி கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
வனிதா - பீட்டர் பால் பஞ்சாயத்து ஊர் அறிந்த சங்கதியாக மாறிவிட்டது. தனது 3வது திருமணம் குறித்து புகார் அளித்தவர்களை வனிதா கிழித்தெடுத்த காலம் மாறி, தற்போது அவர் மீது புகார்களாக குவிய ஆரம்பித்துள்ளது.
தனது திருமண விவகாரங்களை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கிறேன் என வீடியோ ஒன்றை வெளியிட்ட வனிதா, “எங்க ஊர் தஞ்சாவூரில் இரண்டு திருமணங்கள் செய்துகொள்வது இயல்பு. ஏன் என் அப்பா விஜயகுமார் கூட இரண்டு திருமணங்கள் செய்தவர் தான்” என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் தீயாய் பரவ ஆரம்பித்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டுக்கோட்டை காவல் நிலையத்திலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் பாஜகவினரும் வனிதா மீது புகார் கொடுத்தனர்.
பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொண்ட வனிதா, சொந்த மண்ணை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், தஞ்சாவூர் தம்பி, தங்கைகள் மன்னிக்கும் படியும் ட்விட்டரில் சரண்டர் ஆனார்.
இதையடுத்து ஐயப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுசெயலாளர் நிஷா தோட்டா வனிதா மீது புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வனிதா மீது 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன்னையும், தனது கணவரையும் தாக்கி பேசியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளது .
ஆனால் இதை எல்லாம் எதையுமே கண்டுகொள்ளாத வனிதா, தனது இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
பாகுபலி ராஜமாத சிவகாமி தேவி கெட்டப்பில் கம்பீரமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் வனிதாவை கண்டபடி கலாய்த்து வருகின்றனர். இந்த கெட்டப் உங்களை விட ஷிவாங்கிக்கு ரொம்ப பொருத்தமாக இருந்தது என்றும், இது சிவகாமி தேவிக்கே அசிங்கம் என்றும் கொஞ்சம் ஓவராகவே கமெண்ட் செய்து வருகின்றனர்.