லாக்டவுன் நேரத்தில் சோசியல்  மீடியாவில் யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் அவதூறு பரப்பலாம் என்ற வகையில் வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றனர். அப்படி பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் வெளியிட்டு வரும் வீடியோக்கள் பல பிரச்சனைகளை கிளப்பி வருகிறது. அரைகுறை ஆடையில் படுகேவலமான போட்டோக்களை பகிர்ந்து வந்த மீரா மிதுன், திடீரென திரைப்பிரபலங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட ஆரம்பித்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய்யின் மதம் மற்றும் மொழியை இழிவு செய்யும் விதமாக மீரா மிதுன் பதிவிட்ட ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்து போனார்கள். அதன் விளைவு கண்டபடி கமெண்ட்ஸ்கள் குவிய ஆரம்பித்தது. இதையடுத்து நெபோடிசம் பற்றி பேசுகிறேன் என்ற பெயரில் விஜய், சூர்யா, கமல் ஆகியோரது குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சித்தார். த்ரிஷா மற்றும் கமல் ஹாசன் ஜாதி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டார். 

சமீபத்தில் நடிகர் சூர்யா பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்ட மீரா மிதுன், அவருக்கு நடிக்கவே தெரியாது என்றும், ஒரு சாதாரணக் காட்சிக்கு கூட 20 டேக்குகள் வாங்குவார் என்றும், ஆக்டிங் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த கோபமடைந்தனர். 

இதையும் படிங்க: ராஜமாதா கெட்டப்பில் வனிதா... தீயாய் பரவும் போட்டோவை பார்த்து கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

இந்நிலையில் சூர்யா, விஜய் ரசிகர்கள் தன்னை தொடர்ந்து போன் மற்றும் வாட்ஸ் அப்பில் மிரட்டுவதாகவும், கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்கள் வருவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். மேலும் உங்க மனைவி, குழந்தைகளுக்கு இப்படி நடந்தால் ஏற்பீர்களா... என் நெம்பர் பல குரூப்களுக்கு பகிரப்படுகிறது. எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யா தான் பொறுப்பு என்று ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.