பருத்தி வீரன் விவகாரம்! ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டு இருக்கீங்க ப்ரோ.. ஞானவேல் ராஜாவை எச்சரித்த சமுத்திரக்கனி

'பருத்தி வீரன்' பட பிரச்சனை குறித்து, நடிகர் சமுத்திரக்கனி அமீருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை எச்சரித்துள்ளார்.
 

Paruthi Veeran movie issue Samuthirakani Warring praoducer Gnanavel raja mma

அமீர் தவறாக கணக்கு காட்டி, 6 மாதத்தில் முடிக்கவேண்டிய படத்தை 2 வருடத்திற்கு இழுத்தடித்ததாக சமீபத்தில் ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இதற்க்கு இயக்குனர் அமீர் இந்த படத்தின் பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதால் தான் இவ்வளவு நாட்கள் அமைதி கார்த்ததாகவும், இந்த படத்தை 6 மாதத்தில் அப்படியே விட்டு விட்டு ஓடிய தயாரிப்பாளர் நீங்கள்... நான் வாயை திறந்தால் பல உண்மைகள் வெளியாகும் என அதிர்ச்சி கொடுத்தார். அதே போல் இந்த பட பிரச்சனை தெரிந்த பலர் அமைதியாக இருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, இந்த படத்தில் அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சமுத்திரக்கனி... ஞானவேல் ராஜாவை எச்சரிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, 

Paruthi Veeran movie issue Samuthirakani Warring praoducer Gnanavel raja mma

A.L.Vijay: இயக்குனர் ஏ.எல்.விஜய் கட்டிய பிரமாண்ட வீடு..! கிரஹப்ரவேசத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட ஆர்யா!

திரு ஞானவேல் ராஜாவுக்கு..

"அமீர் அண்ணன பத்தி நீங்க பேசுன வீடியோவ இப்பதான் பார்த்தேன். ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டு இருக்கீங்க ப்ரோ... தப்பு தப்பா பேசி இருக்கீங்க!

கேக்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, ஏன் சொல்றேன்னா அந்த படத்துல ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் இருந்தவன் நான். எல்லா பிரச்சனையும் எனக்கு தெரியும்.

ஆறு மாசம் 'பருத்திவீரன்' படபிடிப்பிலே இருந்திருக்கேன், ஆனா உங்களை ஒரு நாள் கூட அங்க பார்த்தது இல்ல. நான்தான் தயாரிப்பாளர்.. நான் தான் தயாரிப்பாளர்... என்று பேசிக்கொண்டே இருக்கீங்க, உங்கள தயாரிப்பாளர் ஆக்கினது, கார்த்தியை ஹீரோவா ஆக்குனது அந்த மனுஷன். எந்த நன்றியும் விசுவாசமும் இல்லாமல் பேசி இருக்கீங்க பிரதர். தப்பில்லையா, எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம். பருத்திவீரன் சம்பந்தமான பிரச்சினைகள் வரும்போது எல்லாம், சரி நமக்கு எதுக்கு அவங்களே பேசிக்குவாங்க... அவங்களே தீத்துக்கு வாங்க... அப்படின்னு நான் தான் இருந்தேன். ஆனா இந்த முறை அப்படி இருக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு!

Paruthi Veeran movie issue Samuthirakani Warring praoducer Gnanavel raja mma

Bigg Boss Reentry: பிக்பாஸ் வீட்டிற்குள் பிரதீப் ரீ-என்ட்ரி? அதிரடியாக நுழைந்த இரு போட்டியாளர்கள் இவர்கள் தான்

அண்ணன் இந்த படத்துக்காக எவ்ளோ உழைச்சி இருக்காரு, எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கிறார் என்று எனக்கு தான் தெரியும். ஏன்னா கால்வாசி படம் நடக்கும்போதே நீங்க கைய விருச்சிடீங்க என்னால் தயாரிக்க முடியாது பணம் இல்ல அப்படின்னு, சகோதரர் சூர்யா வந்து படத்தை நீங்களே வச்சுக்கோங்க அமீர் அண்ணா. அப்படின்னு சொல்லிட்டு போயிட்டார்.

அதுக்குப் பிறகு அந்த படத்தை முடிக்கிறதுக்கு ஒவ்வொரு நாளும் அமீர் அண்ணனோட சொந்தக்காரங்க. நண்பர்கள், இப்படி ஒவ்வொருத்தர் கிட்டயும் அவர் சொல்ல.. சொல்ல.. போய் ஒரு லட்சம், 50 ஆயிரம், இரண்டாயிரம், இப்படி வாங்கிட்டு வந்தவன் நான். இது இல்லாம தம்பி சசி கூட கொஞ்சம் பணம் கொடுத்து இருக்கான் பிரதர் அந்த படத்துக்கு.

அல்மோஸ்ட் 50, 60 பேர் சேர்ந்து காசு கொடுத்து தான் இந்த படத்தை எடுத்து முடிச்சோம். ஆனால் கடைசில நீங்க வந்து அந்த தயாரிப்பாளர் சட்டையை போட்டுக்கிட்டீங்க. உண்மையிலேயே யார் தயாரிப்பாளர் சொல்லுங்க. தயாரிப்பாளர் பதவியை அண்ணன் அமீர் உங்களுக்கு விட்டுக் கொடுத்தார்.

Paruthi Veeran movie issue Samuthirakani Warring praoducer Gnanavel raja mma

80s Buildup Day 1 Collection: சந்தானத்தின் 80ஸ் பில்டப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அந்த பஞ்சாயத்து வந்தப்ப யார் வேணாலும் என்ன வேணாலும் பேசி இருக்கலாம், ஆனால் கார்த்தி இருந்து அமைதியா இருந்தது தான் என்னால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல! ஒரு நாள் அமீர் அண்ணனுடைய நண்பர் ஒருத்தர், எதுக்கு இது.. அப்படியே உட்டுட வேண்டியதுதான நிறுத்துங்கள் படத்தை அப்படின்னு சொன்னாரு. அதுக்கு அமீர் என்ன சொன்னார் தெரியுமா?

ஆரம்பிச்சிட்டோம் கார்த்தியோட எதிர்காலம் இது, அது மட்டும் இல்லாம பெரியவர் என் கைய புடிச்சிட்டு கார்த்திகை கைய புடிச்சு என் கையில குடுத்துட்டு சொன்ன வார்த்தைகள் என் காதில் கேட்டுட்டே இருக்கு. நான் இவர்களுக்காக எதுவும் செய்யலீங்க, அந்த பெரிய மனுஷனுக்காக தான் செய்கிறோம். அப்படின்னு சொல்லி செஞ்சார். அன்னைக்கு அவர் படத்தை நிறுத்தி இருந்தால், இந்த படம் வந்திருக்குமா? ஒரு ஹீரோ வெளியில வந்துருப்பாரா? என்ன பேச்சு பேசுறீங்க.. ஆனா அவ்வளவு தூரம் பெருந்தன்மையா நடந்துக்கிட்ட ஒரு மனுஷனை  எல்லாருமே சேர்ந்து, 

இப்படி 50, 60 பேர் கிட்ட வாங்குன பணத்துக்காக தான் நீங்கெல்லாம் சேர்ந்து உட்கார்ந்து கணக்கு போட்டீங்க. எனக்கே தெரியல எத்தனை பேர் கிட்ட போயிட்டு பணம் வாங்கிட்டு வந்தேன்னு. யார் யார் எவ்வளவு கொடுத்திருக்காங்கன்னு.. சொன்ன வார்த்தையை காப்பாத்தணும்னு பல பேர் கிட்ட கையேந்தி அந்த படத்தை முடிச்சாரு அமீர். அதுக்கு ஆயிரம் கோடி இல்ல... லட்சம் கோடி கொடுத்தா கூட ஈடாகும்.

Paruthi Veeran movie issue Samuthirakani Warring praoducer Gnanavel raja mma

மனிஷாவின் 28 டேக்.. கெஞ்சி வாட்ஸ் ஆப் நோட்.! பிஸ்மி மனைவி செய்த விஷயம்! சீனு ராமசாமி போட்ட பரபரப்பு பதிவு!

நீங்க எல்லாம் ஏதோ ஒன்றரை கோடி கணக்கு கேட்டுகிட்டு இருக்கீங்க ஞானவேல்..! செலவு பண்ணது அதுக்கு மேல அதெல்லாம் பாவம் கணக்கிலேயே இல்ல... அமீர் அண்ணனுடைய பணம் அது! இப்ப நான் சொல்லி இருக்கிறது ஒரு சம்பவம் தான். இன்னும் நிறைய இருக்கு தேவைப்பட்டா நானும் பேச வேண்டி இருக்கும்! இந்த மாதிரி பொதுவெளியில தப்பு தப்பா பேசுவதை இதோட நிறுத்திக்கோங்க இதுதான் எல்லாருக்கும் நல்லது. என எச்சரித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios