பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அனு பிரசவ வலியால் துடித்த வீடியோவையும், குழந்தை பிறந்த தருணத்தையும் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஆபிஸ் என்ற தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை அனு. இதையடுத்து, மெல்ல திறந்தது கதவு என்ற தொடரில் நடித்தார். அதன் பிறகு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று வரிசையாக பல சிரீயல்களில் வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தினார்.
லால் சலாம் படத்தின் முக்கிய அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டு... வாழ்த்து கூறிய லைகா!
இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சீரியலில் நடித்து வந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் குடும்ப செண்டிமெண்ட் நகைச்சுவை நாடகமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சண்முகம், பாப்ரிகோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ், குகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தம்பிகள் இணைந்து வாழும் கூட்டுக் குடும்ப கதையை மையமாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
திருமணம் வேண்டாம் என்று இருக்கும் பாண்டவர்கள் ஐவரை திருமணம் செய்து கொள்ளும் மருமகள்கள் வந்த பிறகு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மகிழ்ச்சிகள் குறித்து சுவாரசிய நிகழ்வுகளை இந்த தொடர் எடுத்து காட்டி வருகிறது. இதற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் அனு.
இந்த நிலையில் அனு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்னதாக ஏற்பட்ட பிரசவ வலியால் துடி துடித்துப் போன அனு, தான் அனுபவிக்கும் பிரசவ லியை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, குழந்தை பிறந்த தருணத்தையும், குழந்தையை கையில் ஏந்திர தருணத்தையும் வீடியோவாக பதிவிட்டு தனது அளவுகடந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
