- Home
- Cinema
- 20 ஆண்டுகளாக வடிவேலுவை கிட்ட கூட நெருங்க விடாத அஜித்... இருவருக்கும் இடையே அப்படி என்ன தான் பிரச்சனை?
20 ஆண்டுகளாக வடிவேலுவை கிட்ட கூட நெருங்க விடாத அஜித்... இருவருக்கும் இடையே அப்படி என்ன தான் பிரச்சனை?
நடிகர் அஜித், 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பிரச்சனையால் வடிவேலு உடன் நடிக்க கூடாது என முடிவெடுத்து, அதனை இன்று வரை பாலோ பண்ணி வருகிறார்.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பைக் மெக்கானிக்காக பணியாற்றி வந்த அஜித் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் முதலில் விளம்பரங்களில் நடித்து வந்தார். இதையடுத்து அவர் பிரேம புஷ்தகம் என்கிற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அவர் நடித்த ஒரே தெலுங்கு படம் இதுவாகும். அஜித்தும் எஸ்.பி.பி மகன் சரணும் நண்பர்கள் என்பதால், அஜித்தை அமராவதி படத்தில் ஹீரோவாக நடிக்க சிபாரிசு செய்தது எஸ்.பி.பி தான்.
அமராவதியில் தொடங்கிய அஜித்தின் தமிழ் திரையுலக பயணம் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டது. குறிப்பாக நடிகர் அஜித் இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டாலும், அதில் அவருக்கு தோல்வி படங்கள் தான் அதிகம், இருந்தும் அவர் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அவரது ரசிகர்கள் தான். தமிழ்நாட்டில் அஜித்துக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர்களை திருப்திபடுத்தும் வகையிலாக கதைகளையே அஜித் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இப்படி உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டு எழில் இயக்கத்தில் வெளியான ராஜா என்கிற திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடித்திருந்தார். அப்படத்தில் இவர்கள் இருவருக்கும் இடையேயான காமெடி காட்சிகள் வேறலெவலில் ஹிட் அடித்தன. அதன்பின் இந்த கூட்டணி இன்று வரை சேர்ந்து நடிக்கவில்லை. இப்படி 20 ஆண்டுகளாக வடிவேலுவை அஜித் தன் படத்தில் நடிக்க வைக்காததற்கு ராஜா படத்தின் போது நடந்த மோதல் தான் காரணம் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... தோனியை தொடர்ந்து சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா - வெளியானது முதல் பட அறிவிப்பு
ராஜா படத்தின் கதைப்படி அஜித்தின் மாமாவாக நடித்திருப்பார் வடிவேலு, அந்த கேரக்டருக்கு ஏற்ப அவர் அஜித்தை அப்படம் முழுக்க வாடா போடா என்று தான் அழைப்பார். ஷூட்டிங் முடிந்த பின்னும் அதே பாணியில் வாடா போடா என வடிவேலு அழைத்தது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால் இயக்குனரிடம் இதுபற்றி கூறி இருக்கிறார் அஜித். இயக்குனர் இதனை வடிவேலுவிடம் கூற, அவர் இதற்கெல்லாம் செவிசாய்க்காமல் மீண்டும் அஜித்தை அவ்வாறே அழைத்து வந்திருக்கிறார்.
இதையடுத்து அப்படத்தின் ஷூட்டிங் முடியும் வரை வடிவேலு உடன் பேச்சைக் குறைத்துக் கொண்ட வடிவேலு, இனி உன் சாவகாசமே வேண்டாம் என்று அன்று முடிவெடுத்தாராம். அதன்பின் தன்னிடம் வந்து கதை சொல்ல வரும் இயக்குனர்கள் வடிவேலு பற்றி பேச்சை எடுத்தால் நோ சொல்லி திருப்பி அனுப்பிவிடுவாராம் அஜித். ராஜா படத்தின் போது நடந்த இந்த பிரச்சனையால் தான் அஜித்தும், வடிவேலும் கடந்த 20 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றவே இல்லையாம்.
இதையும் படியுங்கள்... லால் சலாம் படத்தின் முக்கிய அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டு... வாழ்த்து கூறிய லைகா!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.