Pa Ranjith : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்... திமுக அரசை லெப்ட் ரைட் வெளுத்து வாங்கிய பா.இரஞ்சித்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது என இயக்குனர் பா.இரஞ்சித் பதிவிட்டுள்ளார்.

Pa Ranjith Raise voice against DMK in Kallakurichi illicit liquor incident gan

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 35க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதோடு, பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்து இருக்கிறார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய், அரசை கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித், தமிழக அரசின் அலட்சியத்தால் இத்தகைய கொடுந்துயரம் நடந்திருப்பதாக கூறி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... TVK Vijay : கள்ளக்குறிச்சி சம்பவம் அரசின் அலட்சியத்தை காட்டுகிறது - திமுகவை நேரடியாக அட்டாக் செய்த விஜய்

Pa Ranjith Raise voice against DMK in Kallakurichi illicit liquor incident gan

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்! 

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! 

மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின்
குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்!" என பதிவிட்டு உள்ளார்.

இதையும் படியுங்கள்... கள்ளக்குறிச்சி விவகாரம் : திமுக-வை தில்லாக எதிர்த்த விஜய்... கப்சிப்னு ஆன சூர்யாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios