கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில் 35க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இந்த விவகாரத்தில் குரல் கொடுக்காமல் இருக்கும் சூர்யாவை நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில் 35க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருள் ஆகி உள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசின் அலட்சியமே காரணம் என்று நடிகர் விஜய் சாடி உள்ளார். இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக குரல் கொடுத்த ஒரே ஒரு நடிகரும் இவர் தான். மற்ற நடிகர்கள் வாய் திறக்காமல் கம்முனு இருப்பதை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

குறிப்பாக கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது, ஏதேனும் சம்பவங்கள் நடந்தால் நடிகர் சூர்யா தவறாமல் குரல் கொடுத்து வந்தார். குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் பிரிந்து சென்று தர்ம யுத்தம் நடத்திய சமயத்தில் இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பது நாம் தான் மக்களே என்று சூர்யா பதிவிட்டு இருந்தார். அந்த ட்விட்டை தற்போது வைரலாக்கும் நெட்டிசன்கள், மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பது நாம் அல்ல அண்ணா நீங்க தான் என கலாய்த்து வருகின்றனர்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... TVK Vijay : கள்ளக்குறிச்சி சம்பவம் அரசின் அலட்சியத்தை காட்டுகிறது - திமுகவை நேரடியாக அட்டாக் செய்த விஜய்

அதேபோல் சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறனும் தன் பங்கிற்கு சூர்யாவை பொளந்துகட்டி இருக்கிறார். இதுகுறித்து அவர் தன் எக்ஸ் தள பக்கத்தில் ஷேர் செய்துள்ள மீம் ஒன்றில், தற்போது மீம் கிரியேட்டர்கள் மனநிலை என குறிப்பிட்டு சூர்யாவை யாராச்சும் பாத்தீங்களா என ஒருவர் கையில் அருவாள் உடன் தேடிக்கொண்டிருப்பது போன்று மீம் ஒன்றை பதிவிட்டு பங்கமாக கலாய்த்துள்ளார்.

Scroll to load tweet…

இதுதவிர மற்றொரு பதிவில், ரஜினிமுருகன் படத்தில் பஞ்சாயத்து சீனில் மூவர் பாயிண்ட் வரட்டும் எனக்கூறி பேசாமல் வாயைப் பொத்திக் கொண்டபடி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, கமல், சூர்யா, சத்யாராஜ் ஆகியோர் தற்போது இப்படித்தான் இருக்கிறார்கள் என ட்ரோல் செய்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் திமுக அரசை எதிர்த்து பேசினால் பிரச்சனை வரும் என பயப்படுகிறீர்களா என சூர்யாவை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Scroll to load tweet…

அதேபோல் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் வாய் திறக்காமல் இருக்கும் திருமாவளவன், வன்னியரசு, பா.இரஞ்சித் போன்ற பிரபலங்களை விமர்சித்தும் மீம்ஸ் போடப்பட்டு வருகிறது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... சாராயத்தில் மெத்தனால் கலக்கப்படுவது ஏன்? மனித உடலுக்குள் சென்றதும் என்ன நடக்கும்.? உயிரிழப்பு ஏற்படுவது ஏன்.?