TVK Vijay : கள்ளக்குறிச்சி சம்பவம் அரசின் அலட்சியத்தை காட்டுகிறது - திமுகவை நேரடியாக அட்டாக் செய்த விஜய்
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 25க்கும் மேற்போட்டோர் பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதால் 25க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சில உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியதால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருந்த 10க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தவும் தனிக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அரசை கண்டித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான தளபதி விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Kallakurichi: கள்ளக்குறிச்சியில் இவ்வளவு பேர் உயிரிழக்க காரணம் என்ன? அமைச்சர் எ.வ.வேலு பகீர் தகவல்.!
அந்த பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படியுங்கள்... மக்கள் மீது அக்கறை இல்லாத போலி திராவிட மாடல் அரசின் அலட்சியத்தால் 33 பேர் பலி.. இறங்கி அடிக்கும் எல்.முருகன்!