மக்கள் மீது அக்கறை இல்லாத போலி திராவிட மாடல் அரசின் அலட்சியத்தால் 33 பேர் பலி.. இறங்கி அடிக்கும் எல்.முருகன்!

kallakurichi News : ஆளும் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை பல நாட்களாக நடந்துள்ளது. புகார்கள் பல இருந்த போதும் அதனை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. 

33 people died due to the negligence of the Dravida model government.. L. Murugan tvk

கள்ளக்குறிச்சியில் போலி திராவிட மாடல் அரசின் அலட்சியத்தால் கள்ளச் சாராயம் குடித்து 33 பேர் பலியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என எல்.முருகன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கள்ளக்குறிச்சி கருணாகுளம்  பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் 33 பேர் பலியாகியுள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரடைந்தேன். 

இதையும் படிங்க: Kallakurichi: கள்ளக்குறிச்சியில் இவ்வளவு பேர் உயிரிழக்க காரணம் என்ன? அமைச்சர் எ.வ.வேலு பகீர் தகவல்.!
 
திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் மது மற்றும் போதை பொருட்கள் புழக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதை பலமுறை சுட்டிக்காட்டியும், மக்கள் மீது அக்கறை இல்லாத போலி திராவிட மாடல் அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. ஆளும் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை பல நாட்களாக நடந்துள்ளது. புகார்கள் பல இருந்த போதும் அதனை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. அதன் விளைவால் தற்போது கள்ளச்சாராயம் குடித்த 33 பேர் இறந்துள்ள துயரச் சம்பவம் நடந்தேறி உள்ளது. 

இதையும் படிங்க:  கள்ளக்குறிச்சி கள்ளசாராய விவகாரம்: அரசு அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய தமிழ்நாடு அரசு!

இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதுடன் கள்ளச்சாராயத்தால் இறந்து போன நபர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டையும் தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். அதோடு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios