Natchathiram Nagargiradhu : நட்சத்திரம் நகர்கிறது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சார்பட்ட பரம்பரை பட ஹீரோயின் துஷாரா விஜயன் நடித்துள்ளார். 

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். இவர் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பா.இரஞ்சித். அதே படத்தின் மூலம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே இந்த கூட்டணி வெற்றிவாகை சூடியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார். தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் மூலம் சந்தோஷ் நாராயணன் - பா.இரஞ்சித் கூட்டணி உடைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... பூமர் அங்கிள் ஆனார் யோகிபாபு! வடிவேலுவுக்காக பெயரை மாற்றிக்கொண்ட சுவாரஸ்ய பின்னணி

இந்த வெற்றிக் கூட்டணியின் பிரிவுக்கு காரணம் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட இசை ஆல்பம் தான். சந்தோஷ் நாராயணனின் மகள் தீ மற்றும் பா.இரஞ்சித் டீமை சேர்ந்த பாடகர் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து என்ஜாய் என்ஜாமி என்கிற ஆல்பம் பாடலை வெளியிட்டனர். இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரல் ஹிட் ஆனது. அப்போது சந்தோஷ் நாராயணன் தனது மகள் தீ-யை மட்டும் பிரபலமாக்கியதாகவும், அப்பாடலில் பணியாற்றிய தெருக்குரல் அறிவை புறக்கணித்ததாகவும் சர்ச்சை எழுந்தது. இது தான் பா.இரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் இடையேயான விரிசலுக்கு காரணமாகவும் அமைந்தது.

இதையும் படியுங்கள்... இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க..!

இதன்காரணமாக தான் அடுத்ததாக இயக்கி உள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்துக்காக சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக தென்மா என்கிற இசையமைப்பாளருடன் பணியாற்றி உள்ளார் பா.இரஞ்சித். தென்மா என்பவர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்துக்கு இசையமைத்தவர் ஆவார்.

இதையும் படியுங்கள்... நேர்மையாக வரி செலுத்துபவர் என மத்திய அரசால் கௌரவிக்கப்பட்ட அஜித் பட ஹீரோயின்!!

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சார்பட்ட பரம்பரை பட ஹீரோயின் துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் கலையரசன், டான்ஸிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.