Boomer Uncle : யோகிபாபு, ஓவியா நடிக்கும் படத்தின் பெயர் பூமர் அங்கிள் என மாற்றப்பட்டதற்கு நடிகர் வடிவேலு தான் காரணம் என கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு காண்ட்ராக்டர் நேசமணியாக நடித்திருப்பார். இந்த கேரக்டர் படம் ரிலீசானபோது எவ்வளவு பேமஸ் ஆனதோ, அந்த அளவு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சோசியல் மீடியாவில் காண்ட்ராக்டர் நேசமணி உலகளவில் பேமஸ் ஆனார். அவர் தலையில் சுத்தியல் விழுந்த விஷயத்தை உலகளவில் ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் ஆச்சர்யப்படுத்தினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படியுங்கள்... ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்... இளையராஜாவுக்கு ரஜினி - கமல் வாழ்த்து!!

அந்த சமயத்தில் நடிகர் யோகிபாபு நடித்த படத்துக்கு காண்ட்ராக்டர் நேசமணி என பெயர் வைத்தனர். சுவதீஸ் எம்.எஸ். இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் யோகிபாபுவுக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ஓவியா நடித்துள்ளார். சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு தர்ம பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்... தளபதி எப்போதுமே வேற லெவல்... விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெளியிடப்பட்ட தகவலால் ரசிகர்கள் குஷியோ குஷி!!

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை படக்குழு மாற்றி உள்ளது. அதன்படி இப்படத்துக்கு பூமர் அங்கிள் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அதோடு நடிகர் யோகிபாபு மற்றும் நடிகை ஓவியாவின் தோற்றங்கள் அடங்கிய போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் யோகிபாபு துப்பாக்கி உடனும், ஓவியா வொண்டர் உமன் கெட் அப்பிலும் காட்சி அளிக்கிறார்.

இதையும் படியுங்கள்... போடுடா வெடிய... விஜய், அஜித், ரஜினிக்கு நிகராக இந்த விஷயத்தில் மாஸ் காட்ட போகும் லெஜண்ட் சரவணன்!!

இந்த பெயர் மாற்றத்திற்கு வடிவேலு தான் காரணம் என கூறப்படுகிறது. அவர் காண்ட்ராக்டர் நேசமணி என்கிற தலைப்பு தனது அடுத்த படத்திற்கு தேவைப்படுவதாக கேட்டுக்கொண்டாராம். அந்த தலைப்பும் அவருக்கு தான் பொருத்தமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு யோகிபாபு நடிக்கும் படத்திற்கு பூமர் அங்கிள் என பெயரை மாற்றி உள்ளார்களாம்.