மாநிலங்களவை நியமன எம்பியாக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் ஆகியோர் ட்விட்டரில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  

மாநிலங்களவை நியமன எம்பியாக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் ஆகியோர் ட்விட்டரில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளவர் இளையராஜா. இவர் 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், இதுவரை சுமார் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர்.

மேலும் செய்திகள்: தேனி மாவட்டத்தில் பிறந்த வைரம்... இசைஞானி முதல் மாநிலங்களவை உறுப்பினர் வரை! மறக்க முடியாத 10 நினைவுகள்!

இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டனர். அதாவது கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா தற்போது மாநிலங்களவை எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2018 ஆம் ஆண்டு இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இதுவே அவருக்கு தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்பி பதவியை பெற்றுத்தந்துள்ளது எனலாம்.

மேலும் செய்திகள்: தளபதி எப்போதுமே வேற லெவல்... விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெளியிடப்பட்ட தகவலால் ரசிகர்கள் குஷியோ குஷி!!

இதைதொடர்த்து பலர் இளையராஜாவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வரும் நிலையில், இளையராஜாவின் நண்பரான ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரஜினிகாந்த்... "மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இளைஞானி இளையராஜாவுக்கு அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க..!

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்து மடலில் கூறியுள்ளதாவது... ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என தெரிவித்துள்ளார்.