தளபதி எப்போதுமே வேற லெவல்... விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெளியிடப்பட்ட தகவலால் ரசிகர்கள் குஷியோ குஷி!!
தளபதி விஜய் தரப்பில் இருந்து, அவரது ரசிகர்களை குஷியாக்கும் விதமாக ;விஜய் மக்கள் இயக்கம்; சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் தரப்பில் இருந்து, அவரது ரசிகர்களை குஷியாக்கும் விதமாக ;விஜய் மக்கள் இயக்கம்; சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் தன்னுடைய பெயரில் 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை நடத்தி வருவதும், அதில் உறுப்பினராக இருப்பவர்களிடம் அடிக்கடி நேரில் சந்தித்து பேசுவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் செயல்படும் இந்த அமைப்பு, எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக கூட மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதனை உறுதி செய்யும் விதமாக இந்த அமைப்பில் உள்ள நிர்வாகிகள் சிலர், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் 'விஜய் மக்கள் இயக்கத்தின்' நிர்வாகிகளை தளபதி இன்று காணொளி மூலம் சந்தித்து பேசியதாகவும், இதைத்தொடர்ந்து சில முக்கிய அறிவிப்புகள் அறிக்கையாக வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகள்: கால் அழகை தாராளமாக காட்டி... கிளாமர் உடையில் கிக் ஏற்றும் பேச்சிலர் நாயகி திவ்ய பாரதி!! கண்ணை கட்டும் ஹாட்!!
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க மக்கள் சேவைகளில் அவரது ரசிகர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தளபதியின் உயிருக்கு உயிரான ரசிகர்கள், அப்படிப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் சக்தியை மக்களுக்கு பயனுள்ள வகையில் வழி நடத்தும் விதமாகவும் மற்றும் ஒரு முயற்சியாகவும் ரத்ததானம் செய்ய தளபதி 'விஜய் குருதியகம்' என்ற செயலியை உருவாக்கி இருக்கிறோம். இதன் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்களை, தன்னார்வலர்களாக இணைத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளும், ரத்ததான சேவையை மக்களுக்காக வழங்க உள்ளோம். மேலும் இந்த செயலி ரத்ததானம் கொடுக்க முன்வருபவர்கள் இணைந்து கொள்ளவும் ரத்தம் தேவைப்படும் பயனாளர்கள் பயன்பெறவும் உறுதுணையாக செயல்படும்.
தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம், விலைமதிப்பற்ற பல உயிர்களைக் காக்கும் பொறுப்பை தனது ரசிகர்களான தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும், வழங்கி வழிநடத்த இந்த செயலி துணை நிற்கும் என்பதையும் தளபதியின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் செய்திகள்: போடுடா வெடிய... விஜய், அஜித், ரஜினிக்கு நிகராக இந்த விஷயத்தில் மாஸ் காட்ட போகும் லெஜண்ட் சரவணன்!!
இத்தோடு இதே நன்னாளில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான முகநூல் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், youtube, போன்ற இணையதளம் பக்கங்களையும் திறந்துள்ளோம். தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் குறித்த தகவல்களை இதில் அறிந்து கொள்ளலாம். மற்றபடி இன்றைய சிறப்பு வாய்ந்த இவ்விழாவில் அனைத்து மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
எங்கள் பக்கத்தில் வரும் செய்திகளே அதிகாரப்பூர்வமானது. மற்றும் எங்கள் பக்கத்தின் நிறை குறைகளை பின்னூட்டல்கள் மூலம் சுட்டி காட்டினால் எங்கள் சேவைகளை மேலும் சிறப்பிக்க உதவியாக இருக்கும். அன்பார்ந்த பத்திரிக்கை நண்பர்களே, இந்த செய்தியையும் மற்றும் இந்த செயலியின் சேவை மூலம் அனைத்து மக்களும் பயன்பெறவும் இந்த செய்தியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்து உதவ வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க..!