இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க..!
ஒரு படத்தில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் பெரும் நடிகை சமந்தா, ஆரம்ப காலங்களில் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்குவதற்கு முன்னர், சமந்தா மாடலிங் துறையில் இருந்து கொண்டே பட வாய்ப்பை தேடியவர். அப்போது தான் முதல்முதலில் வாங்கிய சம்பளம் குறித்து இவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது.
திருமணத்திற்கு பின் தமிழ் பட கதாநாயகிகளுக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து விடும், ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காது என்ற எண்ணத்தை அடியோடு மாற்றியவர் என்றால் அது நடிகை சமந்தா தான்.
மேலும் செய்திகள்: பாபம் செய்யாதிரு.. 'இரவின் நிழல்' பட பாடலை வெளியிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!
எதார்த்தமான நடிப்பு, வித்தியாசமான கதை தேர்வு மற்றும் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கதீஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா. அதே போல் நயன்தாராவும் கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் செய்திகள்: கால் அழகை தாராளமாக காட்டி... கிளாமர் உடையில் கிக் ஏற்றும் பேச்சிலர் நாயகி திவ்ய பாரதி!! கண்ணை கட்டும் ஹாட்!!
இதை தொடர்ந்து, தற்போது பாலிவுட் பட வாய்ப்புகள் கூட இவரை தேடி வர துவங்கி விட்டது. எனவே தான் நடிக்கும் படங்களுக்கு சமந்தா சுமார் 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார்.
தற்போது இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெற்றாலும், சமந்தாவின் முதல் சம்பளம் என்னவே 500 ரூபாய் தான். இதனை அவரே பேட்டி ஒன்றியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: வேஷ்டி கட்டி... காலில் மெட்டி போட்டு எடக்கு மடக்கு காஸ்டியூமில் கவர்ச்சி ரகளை செய்யும் மாளவிகா மோகனன்!