Rahul Koli Death: அதிர்ச்சி... 10 வயது குழந்தை நட்சத்திரம் புற்றுநோயால் அதிர்ச்சி மரணம்..!

இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 'செலோ ஷோ' (Chhello Show) படத்தில், நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் ராகுல் கோலி (Rahul Koli) புற்று நோயால் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Oscars entry Chhello Show movie child artist Rahul Koli passes away due to blood cancer

'செலோ ஷோ' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ராகுல் கோலி (Rahul Koli) லுகேமியா (ரத்த புற்றுநோயால்) காலமானார். அகமதாபாத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் ராகுல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவரது மரணம் குறித்த தகவலை அவரது தந்தை ராமு கோலி உறுதிசெய்துள்ளார். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ராகுல் கோலியின் தந்தை ராமு கோலி, ஆட்டோ ரிக்ஷா ஓட்டி தன்னுடைய குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். நடிப்பதில் அபார திறமை கொண்ட ராகுல் கேலிக்கு, திடீர் என  'செலோ ஷோ' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மகனின் ஆசைக்காக அவரை நடிக்க வைத்துள்ளார். மேலும் குஜராத்தி படமான 'செலோ ஷோ' திரைப்படம் 2023 ஆம் ஆண்டிற்கான, ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து... அனுப்பப்படுவதைக்காக இந்திய திரைப்பட கூட்டமைப்பு தேர்வு செய்துள்ளது. இந்த படம் வெளியான பின்னர் தங்களுடைய கஷ்டம் தீர்த்து விடும் என்றும் எண்ணினார் ராம்.

மேலும் செய்திகள்: என்னவேனா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் - சர்ச்சைகளுக்கு சைலண்டாக பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்
 

Oscars entry Chhello Show movie child artist Rahul Koli passes away due to blood cancer

அக்டோபர் 14ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே ராகுல் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின் தந்தை, ராமு தன்னுடைய மகன் சிகிச்சைக்காக தங்களின் வாழ்க்கைக்கு ஜீவனமாக இருந்த ஆட்டோ ரிக்ஷவையும் விற்று மகனுக்கு சிகிச்சை செய்த போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் செய்திகள்: நான் தீவிர ஹிந்து தான் அமெரிக்காவில் அடித்து பேசும் ராஜமௌலி
 

ராகுலின் தந்தை ராமு கோலி மகனின் மரணம் குறித்து கூறுகையில், அக்டோபர் 2ம் தேதி காலை உணவு உட்கொண்ட பிறகு ராகுலுக்கு திடீர் என காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மூன்று முறை ரத்த வாந்தி எடுத்ததாக கூறியுள்ளார். பின்னர் திடீர் என சுயநினைவை இழந்து மயங்கி விழுந்து ராகுலின் உயிர் பிரிந்ததாக கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அக்டோபர் 14-ம் தேதி 'செலோ ஷோ'வை முழு குடும்பமும் ஒன்றாகப் பார்க்கலாம் என நினைத்ததாகவும். ஆனால் 'செல்லோ ஷோ' வெளியாகும் முன்பே ராகுல் இல்லாமல் போய்விட்டார் என கூறியுள்ளார். இந்த படத்தில் ஆறு குழந்தை நட்சத்திரங்களில் ஒருவராக நடித்துள்ளார் ராகுல், என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த திடீர் மரணம், ஒட்டு மொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios