- Home
- Cinema
- என்னவேனா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் - சர்ச்சைகளுக்கு சைலண்டாக பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்
என்னவேனா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் - சர்ச்சைகளுக்கு சைலண்டாக பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்
vignesh shivan : சர்ச்சைகள் குறித்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரப்பில் எந்தவித விளக்கமும் கொடுக்கப்படாவிட்டாலும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், ஒரு போட்டோவை பதிவிட்டு சைலண்டாக பதிலடி கொடுத்துள்ளார்.

சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீசான போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடி தான் என்கிற படத்தை இயக்கினார் விக்கி. இப்படத்தின் போது அவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறு 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த ஜூன் மாதம் பிரபலங்கள் புடைசூழ பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டது. இவர்களது திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதால், இவர்களது திருமண வீடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை. திருமணமாகி 4 மாதங்கள் ஆன போதும் இன்னும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அந்த திருமண வீடியோவை வெளியிடாமல் உள்ளது.
ஆனால் அதற்குள் விக்கி - நயன் ஜோடிக்கு குழந்தையே பிறந்துவிட்டது. இவர்களுக்கு வாடகைத் தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. திருமணத்துக்கு முன்பே முடிவு செய்து இருவரும் குழந்தை பெற்றுள்ளனர். இவர்களுக்கு குழந்தை பிறந்ததன் பின்னணியில் விதிமீறல்கள் இருப்பதாக பரபரப்பு புகார்களும் முன்வைக்கப்படுகின்றன.
இதையும் படியுங்கள்... அப்போதே கணித்த பயில்வான் ரங்கநாதன்..விமர்சனங்களுக்கு உள்ளாகும் நயன்தாரா விவகாரம்
கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நயன் - விக்கி ஜோடி எப்படி அந்த முறையில் குழந்தை பெற்றிருக்க முடியும் என்றும், திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பின்னரே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற முடியும் என இருக்கும் நிலையில், திருமணமாகும் முன்னரே நயன் - விக்கி ஜோடி குழந்தை பெற்றுக்கொள்ள எப்படி அனுமதிக்கப்பட்டது என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம்
இந்த சர்ச்சைகள் குறித்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரப்பில் எந்தவித விளக்கமும் கொடுக்கப்படாவிட்டாலும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில்,‘என்னவேனா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்’ என்ற பாட்டுக்கு ஏற்றார் போல் இருவரும் புன்னகையோடு போஸ் கொடுத்துள்ளனர். இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் பதிலடி கொடுக்கவே விக்னேஷ் சிவன் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளதாக கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள்... 4 மாதத்தில் பெற்றோர்களான நயன்-விக்கி..திருமணம் முதல் இன்று வரை அழகிய தருணங்கள்