என் அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க தேவையில்ல.. நானே பார்த்துப்பேன்.. மாஸ் காட்டிய ராகவா லாரன்ஸ்.
தன்னுடைய அறக்கட்டளைக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என நடிகரும் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு அவர் உதவி செய்து வரும் நிலையில் இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய அறக்கட்டளைக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என நடிகரும் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு அவர் உதவி செய்து வரும் நிலையில் இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சினிமா துறையில் நடன இயக்குனராக பல தடைகளைத் தாண்டி வந்தவர் ராகவா லாரன்ஸ், சினிமா துறையில் சம்பாதிக்கும் பலர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் நிலையில், சமூக அக்கறையுடன் ஏழை எளிய மக்களுக்கு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தன்னால் இயன்ற அளவு உதவி வருகிறார் ராகவா லாரன்ஸ், இதுவரை யாரும் செய்யாத அளவிற்கு தனது அம்மாவுக்கு கோயில் கட்டி தாய் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவர்.
குறிப்பாக மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக பல திட்டங்களை செய்து வருகிறார், அவர்களை பாதுகாத்து வளர்த்து படிக்க வைப்பது வரை தனது அறக்கட்டளையின் மூலமாக செய்து வருகிறார், அவர்கள் ஒவ்வொருவரையும் நம்பிக்கை ஊட்டி அவர்கள் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் தாராளமாக செலவு செய்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: 40 களை கடந்தும் கட்டுக்கடங்காத கவர்ச்சி..கண்களை கூச வைக்கும் கிரண்
இந்நிலையில் இயக்குநர் பி.வாசுவின் இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், படத்திற்காக தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார். அதற்கான புகைப்படங்களும் அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தனது அறக்கட்டளைக்கு இனி யாரும் டொனேஷன் வழங்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்: தஞ்சை ப்ரோமோஷனுக்கு வருவதை ஆதித்ய கரிகாலன் ஸ்டைலில் சொன்ன சீயான்
இதுவரை அவர் நடித்த படங்களில் அவர் மிகச்சாதாரணமாக எளிமையாகவே நடித்திருந்தார். ஆனால் இந்தப் படத்தில் ஹாலிவுட் கதாநாயகனைப் போல தனது உடல்வாகை மாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். மேலும் அதில் அவர் கூறியிருப்பதாவது:- இத்தனை ஆண்டுகளாக என்னுடைய அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி.
நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று, உங்களது நன்கொடைகளை வழங்கி எனது சேவையை ஆதரித்தீர்கள். நானும் என்னால் இயன்ற அளவிற்கு உதவி செய்துள்ளேன், தேவைப்படும் போதெல்லாம் உதவி பெற்றுள்ளேன், ஆனால் இப்போது நான் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன், பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறேன், எனவே இனி மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். எனவே Lawrence Charitable Trust அரைக் கட்டளைக்கு இனி நன்கொடை வழங்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.