40 களை கடந்தும் கட்டுக்கடங்காத கவர்ச்சி..கண்களை கூச வைக்கும் கிரண்
கிரணுக்கு தற்போது 41 வயதாகிறது. இந்த வயதில் இப்படி ஒரு போஸா என பலரும் வாய்ப்பிழந்து வருகின்றனர்
ஒரு காலத்தில் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்,கு கன்னடம் என பன்மொழிகளிலும் அறியப்பட்ட நாயகியாக இருந்தவர் கிரண். ஜெய்ப்பூரை பிறந்த இடமாகக் கொண்ட இவர் கல்லூரி படிக்கையிலேயே மாடலிங்கில் பிஸியாக இருந்தார். இதை அடுத்து இந்தி ஆல்பங்களில் அவ்வப்போது தோன்றி வந்த இவருக்கு 2001 ஆம் ஆண்டு யாதெயின் படத்தின் மூலம் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் ஹிந்தியில் அறிமுகமான கிரண் பின்னர் தெலுங்கிலும் என்று கொடுத்தார். இதை அடுத்து மிதுனம் என்னும் படத்தில் மனுஷாவாக தமிழுக்கு அறிமுகமானார்.
கிரண் மீண்டும் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என சென்றுவிட்ட இவர் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வில்லன் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அந்த படத்தில் லாவன்யாவாக கவர்ச்சி நடிப்பினை வெளிக்காட்டி இருந்தார். தொடர்ந்து திவான், பரசுராம், அரசு, வெற்றி, தென்னவன், திருமலை, புதியது, சின்னா, திமிரு, இது காதல் வரும் பருவம், வசூல், ராஜாதி ராஜா, நாளை நமதே, வாடா, ஜக்குபாய், குரு சிஷ்யன் என தொடர் படங்களில் நடித்து வந்த இவருக்கு பின்னர் தமிழில் பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும் செய்திகளுக்கு...‘வாரிசு’ 100-வது நாள் ஷூட்டிங் ஸ்பெஷல்... ஸ்டைலிஷ் விஜய்யுடன் ஸ்மைலிங் ராஷ்மிகா எடுத்த கியூட் செல்பி வைரல்
கடந்த 2012 ஆம் ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சகுனி படத்தில் வசுந்தரா தேவியாக தோன்றி இருந்தார். வில்லனாக வரும் பிரகாஷ்ரஜூவின் இரண்டாவது மனைவியாக நடித்திருந்த இவரின் நடிப்பு பாராட்டக்கூடியதாகவே அமைந்தது. மீண்டும் 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் சின்ன பொண்ணு என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். பிரபுவின் தங்கையாக நடித்திருப்பார். 2016 ஆம் ஆண்டு இளமை ஊஞ்சல் என்னும் படத்தில் தோன்றியிருந்த இவர் தற்போது சர்வர் சுந்தரம் படத்தில் நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... என்னுடைய இன்னொரு அம்மா... மாமியாரின் நெற்றியில் முத்தமிட்டு விக்னேஷ் சிவன் சொன்ன எமோஷனல் வாழ்த்து
குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு இவருக்கு பெரும்பாலும் குணச்சித்திர வேடங்கள் மட்டுமே அமைந்தது. இதனால் சமீப காலமாக செம கவர்ச்சி போஸ் கொடுத்து இன்ஸ்டாவை நிரப்பி வரும் கிரணின் கவர்ச்சி அலப்பறைக்கு கொஞ்சம் கூட எல்லை இல்லாமல் போய்விட்டது. அதன்படி இவர் சின்ன சின்ன உடைகள் அணிந்து ஹாட் போஸ் கொடுத்து பார்ப்பவரின் கண்களை கலங்கடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... ரவீந்தரிடம் இது தான் பிரச்சனை! மகாலட்சுமி கூறிய அதே விஷயத்தால் தான் முதல் மனைவி விவகாரத்து பெற்று பிரிந்தாரா?
இந்த பதிவுகளுக்கு நெட்டிசன்களிடம் இருந்து மோசமான கமெண்ட்டுகள் வந்த போதிலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் இது போன்ற புகைப்படங்களை அள்ளித் தெளித்து வருகிறார் கிரண். ஆனால் இது போன்ற கவர்ச்சி போஸ்கள் கொடுப்பதால் எந்த பயனும் இதுவரை இவருக்கு கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது. இவருக்கு தற்போது 41 வயதாகிறது. இந்த வயதில் இப்படி ஒரு போஸா என பலரும் வாய்ப்பிழந்து வருகின்றனர்.