நடிகர் சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில், 'டாக்டர்' , 'அயலான்' என இரு படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார். ''டாக்டர்'' திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்க உள்ளார். இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸுடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் 'கேங் லீடர்' பட புகழ் பிரியங்கா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். யோகி பாபு மற்றும் வினய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். 

இதையும் படிங்க: படுபயங்கர ஓபன்... ஓவர் ஹாட் லுக்கில் விருது விழாவை தெறிக்கவிட்ட பூஜா ஹெக்டே...!

நேற்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு ’’டாக்டர்’’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. ஆங்காங்கே சிதறும் ஆபரேஷன் கத்திகளுக்கு இடையே, சிவகார்த்திகேயன் நாற்காலில் கையில் ரத்தக்கறையுடன் கால் மேல் கால் போட்டு  அமர்த்திருப்பது போன்ற அந்த போஸ்டர், சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 

எப்பவுமே தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் என எதுவெளியானாலும் அதை எங்கிருந்து சுட்டார்கள் என்று ஆராய்ச்சி செய்து வெளியிடுவதற்காகவே, ஒரு குரூப் சோசியல் மீடியாவில் சுற்றி வருகிறதே. அந்த நெட்டிசன்கள் குரூப், சிவகார்த்திகேயனின் ’’டாக்டர்’’ பட போஸ்டர் எங்கிருந்து சுட்டது என்று கண்டுபிடித்துவிட்டனர். 

இதையும் படிங்க: கடலையே கொந்தளிக்க வைத்த கஸ்தூரி... கடற்கரையில் செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தி அதகளம்...!

நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை தனுஷின் ’டாக்டர்ஸ்’ படத்திலிருந்தும், அறுவை சிகிச்சை கத்திகள் பறப்பதை ஹாலிவுட் படமான நைஃப் அவுட்டிலிருந்தும் காப்பி அடித்துள்ளார்களாம். இதையடுத்து சிவகார்த்திகேயனின் ’’டாக்டர்’’ பட போஸ்டர் குறித்த மீம்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.