புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெட்பிளிக்ஸ்! குஷியான ரசிகர்கள்!
நயன்தாரா திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளதால், நயன்தாராவின் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
நயன்தாரா திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளதால், நயன்தாராவின் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமண வீடியோக்களை வெளியிடும் ஒப்பந்தத்தை நெட்ஃபிக்ஸ் நிறுவனம் ரத்து செய்து விட்டதாக சமூக வலைதளத்தில் சில வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன், ரொமான்டிக் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.
மேலும் செய்திகள்: ஒருதலை காதலால் விஜய் டிவி சீரியல் நடிகர் தற்கொலை முயற்சியா? உண்மை என்ன... வைரலாகும் வீடியோ..!
நடிகை நயன்தாரா கடந்த மாதம் அவரது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இவர்களது திருமணத்தில், பல பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.
மேலும் இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பும் உரிமையை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு ரூபாய் 25 கோடிக்கு, கொடுத்து விட்டதாகவும் இதனை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
மேலும் செய்திகள்: சினிமாவை மிஞ்சிய ரொமான்ஸ்... கடற்கரையில் காதல் பொங்க பொங்க போட்டோ ஷூட் நடத்திய நயன் - விக்கி! போட்டோஸ்
இவர்களுடைய திருமணம் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், விக்னேஷ் சிவன், அவ்வப்போது தன்னுடைய திருமண புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களுடைய ஒப்பந்தத்தை மீறி விக்னேஷ் சிவன் புகைப்படங்களை வெளியிட்டதாகவும், இதனால் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் உரிமையை திரும்ப பெற்றதாகவும் கூறி சில வதந்திகள் தீயாக பரவியது.
மேலும் செய்திகள்: லயனுக்கும்... டைகருக்கும் பொறந்தவன் என் பையன்..! பைட்டராக மிரட்டும் விஜய் தேவரகொண்டாவின் 'லிகர்' ட்ரைலர்!
இதைத் தொடர்ந்து இன்று நயன்தாரா விக்னேஷ் சிவன் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் சிலவற்றை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதேபோல் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண வீடியோவை ஒளிபரப்ப இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனின் காதல் அனுபவங்கள் டாக்குமென்டரி படமாக எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனை தொடர்ந்து விரைவில் இவர்களது திருமண வீடியோக்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பும் டி.ராஜேந்தர்..!
பல்வேறு வதந்திகளுக்கு பின்னர் மீண்டும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமண வீடியோக்கள் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.