ஒருதலை காதலால் விஜய் டிவி சீரியல் நடிகர் தற்கொலை முயற்சியா? உண்மை என்ன... வைரலாகும் வீடியோ..!
ஒருதலை காதலால் விஜய் டிவி சீரியல் நடிகர், விஜய் டிவி சீரியல் பிரபலம் ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து அவரே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான, 'கனாக்காணும் காலங்கள்' சீரியலில் நடித்த நடிகர் - நடிகைகளுக்கு இப்போது வரை மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த சீரியலில், புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் தான் ராகவேந்திரன். இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த சீரியலை தொடர்ந்து, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகி வரும் 'காற்றுக்கென்ன வேலி' சீரியலில் கதாநாயகியின் சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆனால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கான முக்கியத்தும் குறைவதாக கூறி அந்த சீரியலில் இருந்து ராகவேந்திரன் வெளியேறினார். மேலும் தற்போது சீரியல் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் இவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: சினிமாவை மிஞ்சிய ரொமான்ஸ்... கடற்கரையில் காதல் பொங்க பொங்க போட்டோ ஷூட் நடத்திய நயன் - விக்கி! போட்டோஸ்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகவேந்திரன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில், வீட்டில் இருந்தபடியே தனக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்படும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்க்கு கேப்ஷனாக 'ஒரே ஒரு ஒன் சைடு லவ் டோட்டல் பாடியும் டேமேஜ்'... அதனால் டிப்ரஷன் என கூறி சில ஸ்மைலீஸ்சுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
மேலும் செய்திகள்: லயனுக்கும்... டைகருக்கும் பொறந்தவன் என் பையன்..! பைட்டராக மிரட்டும் விஜய் தேவரகொண்டாவின் 'லிகர்' ட்ரைலர்!
எனவே, ராகவேந்தர் காதல் தோல்வியின் காரணமாக... தற்கொலை முயற்சி மேற்கொண்டாரா என்ற கோணத்தில் பல்வேறு செய்திகள் சமூக வலைதளத்தில் வெளியானது. தற்போது இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், நான் தற்கொலை முயற்சி மேற்கொள்ளவில்லை, சாதாரணமாக எடுத்து போட்ட வீடியோ தான் அது. அதை நான் மருத்துவமனையில் இருந்து எடுத்து போட வில்லை. வீட்டில் இருந்தபோது எடுத்து போட்டேன் என கூறி விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் மனஉளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மற்றபடி மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தன்னுடைய வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார். இவரது இந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.