Asianet News TamilAsianet News Tamil

Dhanoosh Nepoleon: அட இவங்க தான் நெப்போலியன் மருமகளா? தேவதை மாதிரி இருக்காங்க.. வைரலாகும் நிச்சயதார்த்த வீடியோ

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷை திருமணம் செய்து கொள்ள உள்ள, அக்ஷயா யார் என பலரும் தேடி கொண்டிருந்த நிலையில், தற்போது தனுஷ் - அக்ஷயாவின் நிச்சயதார்த்த வீடியோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Nepoleon Son Dhanoosh Fiance Face reveled in engagement video mma
Author
First Published Jul 11, 2024, 2:25 PM IST


எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து, இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் 1991-ஆம் ஆண்டு வெளியான 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகி, பின்னர் அப்படியே ஹீரோவாக உயந்தவர் நெப்போலியன். இவர் சும்மா வேட்டியை மடித்து கட்டி சண்டை போட்டால் அந்த அய்யனார் கணக்கா இருக்கும் என்பதால் தான், இவருக்கு அந்த மாவீரன் நெப்போலியன் பெயரையே வைத்தார் பாரதி ராஜா.

நெப்போலியன் நன்கு படித்தவர் என்றாலும், இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று கொடுத்தது, சீவலப்பேரி பாண்டி, எட்டிபட்டி ராசா, போன்ற கிராமத்து படங்கள் தான். பார்ப்பதற்கு முரட்டு தனமாக இருந்தாலும் நிஜத்தில் ஒரு மீசை வைத்த குழந்தை தான் நெப்போலியன் என்பது அவருடன் பழகிய அனைவருக்குமே தெரியும். அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும்... தமிழர்கள் பலருக்கு ஐடி துறையிலும் தன்னுடைய பண்ணையிலும் வேலை கொடுத்துள்ள நெப்போலியன், சினிமாவை தாண்டி அரசியலிலும் கில்லியாக இருந்தவர்.

Nepoleon Son Dhanoosh Fiance Face reveled in engagement video mma

ஐடி கம்பெனி முதல்.. 3000 ஏக்கரில் விவசாயம் வரை! அமெரிக்கர்களை அசர வைக்கும் நெப்போலியனின் Net Worth விவரம்!

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று 2001-ஆம் ஆண்டு எம்.எல்.ஏ-வாக பதவி வகித்த நெப்போலியன், பின்னர் பெரம்பூர் பாராளுமன்ற தொகுதியிலும் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆக மாறினார். நெப்போலியனின் மாமா நேரு திமுக கட்சியில் இருந்தது, இவர் கலைஞரின் தீவிர பற்றாளர் என்பது தான் இவர் அரசியலில் குடித்த காரணம். ஆனால் தற்போது திமுகவில் இருந்து விலகி பாஜக கட்சியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.

Nepoleon Son Dhanoosh Fiance Face reveled in engagement video mma

'இந்தியன் 2' சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு! நாளை மட்டும் 5 காட்சிகள் திரையிடப்படுகிறது!

பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த போதும், அரசியல் பணிகள் இவரின் கதவை தட்டியபோதும் அவை எல்லாவற்றையும் தவிர்த்து விட்டு, நெப்போலியன் அமெரிக்கா சென்று செட்டில் ஆக காரணம் இவர் குடும்பத்தின் மீதும், பிள்ளைகள் மீதும் வைத்திருந்த பாசம் தான். நெப்போலியனின் மகன் தீவிர தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நிலையில்... தனுஷுக்கு சிறந்த மருத்துவம் வேண்டும் என்பதற்காகவே நெப்போலியன் அமெரிக்கா சென்று செட்டில் ஆனார். 

Nepoleon Son Dhanoosh Fiance Face reveled in engagement video mma

Trisha Photos: வா வா என் தேவதையே..! அப்பாவின் அன்பு மழையில் நனையும் மழலையாய் திரிஷா! வைரலாகும் ரேர் போட்டோஸ்!

நெப்போலியனின் இரண்டு மகன்களும் தற்போது அவரின் ஐடி தொழிலை கவனித்து வருகிறார்கள். இந்நிலையில் 27 வயதாகும் தன்னுடைய மூத்த மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க நெப்போலியன் முடிவு செய்துள்ள நிலையில், கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. விரைவில் திருமணம் ஜப்பானில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சென்னையில் ரிசப்ஷன் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளில் நெப்போலியன் மற்றும் அவரின் மனைவி தீவிரம் காட்டி வருகிறார்கள். சென்னையில் உள்ள தங்களின் வீட்டில் தங்கி, சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திருமண அழைப்பு வைத்த இவர் நேற்று கேப்டன் விஜயகாந்துக்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர் பிரேமலதா விஜயகாந்திடம் திருமண அழைப்பிதழை கொடுத்தார்.

Nepoleon Son Dhanoosh Fiance Face reveled in engagement video mma

பேஸ்புக், ட்விட்டருக்கு டஃப் கொடுக்க நினைத்த ரஜினி மகள் சௌந்தர்யா! 2 வருடத்தில் இழுத்து மூடப்பட்ட நிறுவனம்!

தனுஷ் அக்ஷயா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்கிற தகவல் மட்டுமே வெளியானதே தவிர, அந்த பெண் யார் என்கிற மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நிச்சயதார்த்தம் குறித்து அறிவித்த தனுஷும் வருங்கால மனைவி பற்றியோ அவரின் புகைப்படத்தையோ வெளியிடவில்லை. ஆனால் தற்போது நிச்சயதார்த்தம் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. நெப்போலியன் மருமகள் அக்ஷயா தேவதை போல் இருக்கிறார். கூடிய விரைவில் இவரது மற்ற புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios