Asianet News TamilAsianet News Tamil

'இந்தியன் 2' சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு! நாளை மட்டும் 5 காட்சிகள் திரையிடப்படுகிறது!

கமல்ஹாசன் நடிப்பில் நாளை வெளியாக உள்ள, 'இந்தியன் 2' படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது, கமல் ரசிகர்களை உச்சாகப்படுத்தியுள்ளது.
 

Tamil Nadu government has given permission for the special screening indian 2 mma
Author
First Published Jul 11, 2024, 1:10 PM IST

பல வருடங்களாகவே, விஜய், அஜித், கமல், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் அன்று சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் ரசிகர்கள் மூலம் சில அசம்பாவிதங்கள் நேர்ந்து அது ரசிகர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிவதால், கடந்த 3 வருடங்களாக தமிழக அரசு, சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.

குறிப்பாக 5 மணிக்கு, 6 மணிக்கு துவங்கப்படும் சிறப்பு காட்சிகளுக்கு தடை விதித்த தமிழக அரசு 9 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கிறது. இந்நிலையில் நாளை வெளியான உள்ள 'இந்தியன் 2' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழக்க வேண்டும் என, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், நாளை ஒரு நாள் மட்டும் 5 காட்சிகளை திரையிட்டுக்கொள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios