தன்னை கிண்டலடித்த நடிகை குறித்து ஹிண்ட் கொடுத்த நயன்தாரா... தேடிக் கண்டுபிடித்து ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

நயன்தாராவை கிண்டலடிக்கும் விதமாக பேட்டி ஒன்றில் பேசி இருந்த நடிகை யார் என்பதை கண்டுபிடித்து அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Nayanthara Fans Trolled Malavika Mohanan for her controversial interview

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. பேய் படமான இதை கேம் ஓவர், மாயா போன்ற படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் புரமோஷனுக்காக நடிகை நயன்தாரா பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் பேசப்படுவதை தான் தொடர்ந்து பார்த்து வருவதாக கூறிய நயன்தாரா, ஒரு நடிகை பேட்டி ஒன்றில், தான் மருத்துவமனை காட்சியில் மேக்-அப் போட்டு நடித்ததை கிண்டல் செய்யும் விதமாக பேசி இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நயன்தாரா பேசியதாவது : “மருத்துவமனை சீன்ல தலைமுடியை விரித்துப்போட்டு நடிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அது ஒரு கமர்ஷியல் படம் அதற்கு அந்த அளவு மேக்-அப் போட்டு தான் நடிக்க வேண்டும் என இயக்குனர் சொன்னார். அதனால் அப்படி நடித்தேன்” என கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள்... 'கனெக்ட்' படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்!

இதை நயன்தாரா சாதாரணமாக பேசிவிட்டு சென்றாலும், அவரது ரசிகர்கள் நயனை கேலி செய்த நடிகை யார் என வலைவீசி தேடி கண்டுபிடித்துவிட்டனர். அவர் வேறுயாரும் இல்லை, மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் தான். அவர் பேசிய வீடியோவையும் நயன்தாரா அதற்கு பதிலடி கொடுத்ததையும் சேர்த்து ஒரே வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி நயன்தாராவை கிண்டலடித்த மாளவிகா மோகனனை கடுமையாக ட்ரோல் செய்தும் வருகின்றனர். ஏற்கனவே மாளவிகா மோகனனுக்கு சுத்தமாக நடிக்கவே வரவில்லை, அவர் வெறும் கவர்ச்சியை காட்டி தான் ரசிகர்களை கவர்ந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது லேடி சூப்பர்ஸ்டாரையே கிண்டலடித்துவிட்டதால், அவரை மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... குடும்ப குத்து விளக்கு போல்.. பச்சை நிற சல்வாரில்.. தலை நிறைய மல்லிப்பூ வைத்து மனதை மயக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios