நட்சத்திர காதல் ஜோடியாக திரையுலகில் வட்டமிட்டு கொண்டிருக்கும், நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு  எப்போது திருமணம், என இவர்களிடம் கேள்வி எழுப்பாத மீடியாக்களே இல்லை. 

இப்படி கேள்விகளை கேட்டால், இருவருமே மவுன சிரிப்பை பதிலாக உதிர்த்து, எஸ்கேப் ஆகி விடுவார்கள். அதே நேரத்தில், இந்த வருடம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே பல தகவல்கள் உலா வந்த நிலையில், விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 35 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ள இவர் எப்போது தன்னுடைய திருமண தேதியை வெளியிடுவார் என மில்லியன் ரசிகர்கள் காத்திருக்கிறனர். 

மேலும் செய்திகள்: முடி வெட்டும் கடைகளுக்கு தடை போட்ட தமிழக அரசு! மகன்களுக்கு வீட்டிலேயே ஹார் கட் செய்த பிரபல நடிகர்!
 

ஆனால் நயன், காதலர் விக்கியுடன் எடுத்து கொள்ளும் விதவிதமான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு,  திருமணம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.  

'நானும் ரவுடிதான்"  படத்தின் படப்பிடிப்பின்போது நட்பாக மலர்ந்த இவர்களுடைய உறவு,  மெல்ல வளர்ந்து படப்பிடிப்பு முடிவதற்குள் காதலாக வலுப்பெற்றது.  கிட்ட தட்ட 5 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: 47 வயது... இனி திருமணமே வேண்டாம்..! முக்கிய நபரின் இழப்பால் நடிகை எடுத்த விபரீத முடிவு!
 

குறிப்பாக இந்த கொரோனா லாக் டவுன் இவர்களின் காதலை மேலும் வலுப்பெற வைத்துள்ளது. இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுடைய வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.

ஏற்கனவே இவர்கள் இருவரும் 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், இருவரும் தங்களுடைய திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் எனவே கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்தவுடன், எந்நேரமும் இவர்கள் தங்களுடைய திருமண அறிவிப்பு பற்றிய தகவல்களை வெளியிடலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்..! வாட்டடா வந்ததுக்கும் குட் - பை சொன்ன பிரியா பவானி சங்கர்!
 

நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.