Asianet News TamilAsianet News Tamil

முடி வெட்டும் கடைகளுக்கு தடை போட்ட தமிழக அரசு! மகன்களுக்கு வீட்டிலேயே ஹார் கட் செய்த பிரபல நடிகர்!

கொரோனா அச்சம் நாளுக்கு நாள், தமிழகத்தில் அதிகரித்து வருவது ஒரு புறம் இருந்தாலும், சிறு, குறு, தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக முற்றிலும் பாதித்து விட கூடாது என்பதற்காக, இந்த ஊரடங்கு சமயத்திலும், சில தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு.
 
actor jayam ravi hair cut him children photo goes viral in social media
Author
Chennai, First Published May 11, 2020, 2:51 PM IST

 கொரோனா அச்சம் நாளுக்கு நாள், தமிழகத்தில் அதிகரித்து வருவது ஒரு புறம் இருந்தாலும், சிறு, குறு, தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக முற்றிலும் பாதித்து விட கூடாது என்பதற்காக, இந்த ஊரடங்கு சமயத்திலும், சில தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு.

அதே நேரத்தில், முடி திருத்தும் கடைகள் மற்றும், பியூட்டி பார்லர் போன்றவை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் முடி வெட்ட முடியாமல் அவதிப்படுகிறார்கள். 

actor jayam ravi hair cut him children photo goes viral in social media

அந்த வகையில், திரைபிரபலங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? முடிந்தவரை அவர்களுடைய வீட்டில் உள்ளவர்கள் தான் அவர்களுக்கு முடி வெட்டிவிடுகிறார்கள். இதனை, பொழுது போக்கிற்காக சமூக வலைத்தளத்திலும் ஷேர் செய்து தங்களுடைய ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி சந்தாஷப்பட்டு கொள்கின்றனர் பிரபலங்கள்.

இதோ போல் தன்னுடைய மகன்களுக்கு தானே முடிவெட்டியுள்ளார் பிரபல நடிகர் ஜெயம் ரவி. மேலும் தன்னுடைய மகன்களுக்கு முடி வெட்டிய புகைப்படத்தையும்  பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor jayam ravi hair cut him children photo goes viral in social media

நடிகர் ஜெயம் ரவி, தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். வரலாற்று கதையை மையப்படுத்தி இந்த படம் எடுக்க படுவதால், இந்த படத்தில் நடிக்கும் அணைத்து நடிகர்களும், முடி அதிகமாக வைத்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பிரச்சனை காரணமாக அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முடங்கி உள்ளது போல், இந்த படத்தின் படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டது. அணைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு  வந்த பின்னரே... மீண்டும் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகும் என தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios