சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதிப்பவர்கள் நடிகர்கள் மட்டும் அல்ல நடிகைகளும் தான் என நிரூபித்து காட்டியவர் நடிகை பிரியாபவானி ஷங்கர். 

இன்ஜினியரிங் படித்து விட்டு, திரையுலகம் மேல் உள்ள ஆர்வத்தின் காரணமாக பிரபல நியூஸ் சேனலில், செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, சீரியல் நாயகியாக வளர்ந்து தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக மாறி இருக்கிறார்.

தொடர்ந்து தான் நடிக்கும் திரைப்படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் இவர், அறிமுகமான முதல் திரைப்படமான 'மேயாத மான்' இவருக்கு சிறந்த நாயகி என்கிற பெயரை எடுத்து கொடுத்தது மட்டும் இன்றி, ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் செம ஹிட்.

மேலும் செய்திகள்: நயன்தாரா குழந்தையில் கூட இவ்வளவு அழகா! யாரும் இதுவரை பார்த்திடாத புகைப்படத்தை வெளியிட்டு அம்மாவுக்கு வாழ்த்து!
 

மேலும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பிரச்சனைகளை கடந்து மீண்டும் துவங்கப்பட்ட போது, நடந்த மிகப்பெரிய விபத்தில், மூன்று பேர் உயிரிழந்ததுடன், 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனால், இந்தியன் 2 படத்தின்படப்பிடிப்பு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்ட போது, மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்த பிரபலங்களில் பிரியா பவானியும்  ஒருவர்.

மேலும் செய்திகள்: மகள் வயது பெண்ணின் முன்னழகை மோசமாக வர்ணித்த இயக்குனர்..! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!
 

இந்த படத்தை தொடந்து, நடிகை பிரியா பவானியின் கை வசம், குறத்தி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற, பொம்மை, வான் உள்ளிட்ட படங்கள் உள்ளன.

தொடர்ந்து, கவர்ச்சி இல்லாத கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவது பற்றி எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், "என் முகத்திற்கும், உடல் அமைப்பிற்கும் கவர்ச்சி சரிப்பட்டு வராது. சில படங்களில் கவர்ச்சி வேடங்கள் வந்தும் அதற்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என கூறி மறுத்துவிட்டதாக கூறியுள்ளார் .