எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விதமாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருபவர்,  பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா.

இந்நிலையில் தற்போது இவர், தன்னுடைய மகள் வயது பெண் ஒருவரின் முன்னழகை, மிகவும் மோசமாக விமர்சிக்கும் விதமாக போட்டுள்ள ட்விட்க்கு  நெட்டிசன்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய கண்டனத்தை எழுப்பி வருகிறார்கள்.

பெங்களூரில் சில பெண்கள் மதுக்கடைகள் முன் வரிசையில் நின்றது குறித்து ஒரு கருத்தை கூறி இவர் ஏற்படுத்திய சர்ச்சையை இன்னும் ஓயாத நிலையில், அடுத்த சர்ச்சையை ஆரம்பித்துவிட்டார்.

மேலும் செய்திகள்: முன்னணி நடிகர்களுக்கு கூட இந்த மனசு வராது..! இந்த வருடம் முழுவதும் சம்பளமே வேண்டாம் என கூறிய பிரபல நடிகர்!
 

தற்போது இவர் எழுப்பியுள்ள சர்ச்சை என்னவென்றால்,   ஒரு காரில் இரண்டு பெண்கள் அமர்ந்துள்ளனர். முன் சீட்டில் அமர்ந்திருக்கும் பெண், அழகாக நிறைய நகைகளை அணிந்துள்ளார். பின் சீட்டில் அமர்ந்திருப்பவர் எளிமையாக கழுத்தில் ஒரே ஒரு சோக்கர் மட்டும் அணிந்து, டீப் லோ நெக் உடை அணிந்துள்ளார். 

இதுகுறித்து ராம்கோபால் வர்மா கமெண்ட் செய்கையில், ’மனிதன் உருவாக்கிய நகை முன்னால் உள்ளது என்றும், கடவுள் உருவாக்கிய நகை பின்னால் உள்ளது என்றும் அந்த பெண்ணின் முன்னழகை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் செய்திகள்: குட்டி பாப்பா முதல்... கியூட் நாயகி வரை! சாய்பல்லவி குடும்பத்துடன் எடுத்து கொண்ட அரிய புகைப்படங்கள்!
 

இது தான் பலரது கோவத்திற்கும் காரணம். எனவே நெட்டிசன்கள் பலர் இவரின் இந்த மோசமான கமெண்டுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். சிலர் உங்களின் மகள் வயது பெண்ணை இப்படி வர்ணிக்கலாமா என கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.

ராம் கோபால் வர்மாவின் பதிவு இதோ ...