தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அணைத்து ரசிகர்கள் மனதையும் கவர்ந்து, கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்

இவரை திரைப்படங்களில் நடிக்க வைக்க, தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், என வரிசை கட்டி நின்றாலும் , கதைக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார் நயன்தாரா. 

இவர் நடிப்பில் கடைசியாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் நடிப்பில் நடித்திருந்த 'தர்பார்' திரைப்படம் வெளியானது. இந்த படம், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை என்றாலும், முதலுக்கு மோசம் இல்லாமல் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்: மகள் வயது பெண்ணின் முன்னழகை மோசமாக வர்ணித்த இயக்குனர்..! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!
 

இதை தொடர்ந்து தற்போது நெற்றிக்கண் , அண்ணாத்த, மூக்குத்தி அம்மன், காத்துவாக்குல ரெண்டு காதல், என நான்கு படங்கள் இவரின் கை வசம் இருந்தாலும், கொரோனா பிரச்சனைக்கு பின்பு படங்களின் ரிலீஸ், மற்றும் படப்பிடிப்பு பணிகளில் பிசியாவார்.

இந்நிலையில், தற்போது ஊரடங்கின் காரணமாக கிடைத்த ஓய்வை, காதலனுடன் ஜாலியாக போக்கி வரும் நயன், நேற்றையதினம் இதுவரை யாரும் பார்த்திடாத இவரின் சிறிய வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து தன்னுடைய அம்மாவிற்கு, அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: உள்ளாடை மட்டுமே அணிந்து ஹாட் போஸ் கொடுத்த ஓவியா..! ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி பட வேட்டையா?
 

அதே நேரத்தில், இவருடைய காதலர் விக்னேஷ் சிவனும், வருங்காலத்தில் தன்னுடைய குழந்தைக்கு அம்மாவாக போகும் நயனுக்கு அன்னார் தினம் வாழ்த்துக்குள் கூறி நெகிழவைத்து விட்டார். 

ஐயா படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயத்தை தமிழில் துவங்கிய நடிகை நயன்தார, இதை தொடர்ந்து, சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சந்தரமுகி, சிவகாசி, கஜினி என பெரிய நடிகர்கள் படங்களில் வரிசை கட்டி நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: கொரோனாவை அடுத்து பிரபலங்களை பெரிதும் பாதித்த சம்பவம்! சோகத்தில் உருக்கமாக போட்ட பதிவு!
 

தற்போது, இவர் தவழும் குழந்தை வயதில்... அம்மாவின் அன்பு முத்தங்களை பெரும் அரிய புகைப்படம் இதோ...

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

HAPPIEST AMMA DAY‼️ #happymothersday

A post shared by nayanthara🔵 (@nayantharaaa) on May 10, 2020 at 7:45am PDT