47 வயதாகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் நடிகை சித்தாரா, இனியும் தன்னுடைய வாழ்க்கையில் திருமணம் என்கிற பேச்சுக்கு இடமே இல்லை என்றும், அதற்கு காரணம் முக்கிய நபரின் இழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

கேரளத்து பைங்கிளியான சித்தாரா, தமிழில் புது புது அர்த்தங்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர்.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, உன்னை சொல்லி குற்றமில்லை, புது புது ராகங்கள்,புது வசந்தம், புரியாத புதிர் என அடுக்கடுக்காக பல படங்களில் கமிட் ஆகி நடித்தார்.

நடிப்பில் யதார்த்தத்தையும், பார்ப்பதற்கு அக்கம் பக்கத்துக்கு வீட்டு பெண் போல், இவர் ரசிகர்கள் கண்களுக்கு தெரிந்தது தான் இவரின் மிகபெரிய வெற்றி. தமிழ் மொழி மட்டும் இன்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், என பல்வேறு மொழிகளில் 200 கும் அதிகமான படங்களில் நடித்துள்ள சித்தாரா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

மேலும் செய்திகள்: நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்..! வாட்டடா வந்ததுக்கும் குட் - பை சொன்ன பிரியா பவானி சங்கர்!
 

47 வயதாகும் இவர், முன்னணி நடிகையாக இருக்கும் போது ஒருவரை காதலித்ததாகவும், அந்த காதல் தோல்வியில் முடிந்ததால், திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்தார். 

இதை தொடர்ந்து, இவரின் அப்பாவின் இழப்பு... தற்போது திருமணமே வேண்டாம் என்கிற முடிவை எடுக்க வைத்துள்ளது. 

மேலும் செய்திகள்: நயன்தாரா குழந்தையில் கூட இவ்வளவு அழகா! யாரும் இதுவரை பார்த்திடாத புகைப்படத்தை வெளியிட்டு அம்மாவுக்கு வாழ்த்து!
 

இது குறித்து சமீபத்தில் அவர் கூறுகையில், என் வாழ்க்கையில் திருமணமே வேண்டாம் என முடிவு செய்தது நான் தான். காரணம்,  முக்கியமான ஒரு நபவரை இழந்து விட்டேன். அவர் என் அப்பா  தான். அவர் இறந்த பின்பு திருமணம் பற்றிய நினைப்பே வரவில்லை. சரி இந்த வயதில் உங்களுக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை துணை கிடைத்தால் திருமணம் செய்வீர்களா என்ற கேள்விக்கு கண்டிப்பாக மாட்டேன் என அடித்து கூறுகிறார் சித்தாரா.