Asianet News TamilAsianet News Tamil

விமான நிலையத்தில் தன் பாதுகாவலரால் தள்ளி விடப்பட்ட நபரை சந்தித்து அவர் ஆசையை நிறைவேற்றிய நாகர்ஜுனா! வீடியோ

நடிகர் நாகார்ஜுனா, விமான நிலையம் வந்தபோது அவரை காண வந்த நபரை பவுன்சர் ஒருவர் தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் விமான நிலையம் வந்தபோது நாகார்ஜுனா அந்த நபரை சந்தித்து அவருடைய ஆசையை நிறைவேற்றி உள்ளார். இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

Nagarjuna meets a fan who was pushed down by a bouncer at the airport mma
Author
First Published Jun 27, 2024, 3:34 PM IST

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நாகார்ஜுனா, ஹீரோ என்பதை தாண்டி கடந்த சில வருடங்களாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்தும் கொண்ட வெய்ட்டேஜான ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் இயக்குனர் சேகர் காமுலா இயக்கத்தில், தனுஷ் ஹீரோவாக நடித்து வரும் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நாகார்ஜுனா ஏர்போர்ட் வந்தபோது, அவருடன் போட்டோ எடுக்க விரும்பிய ஏர்போர்ட்டில் வேலை செய்யும் சாதாரண ஊழியர் ஒருவர். அவர் அருகே செல்ல முயன்ற நிலையில்.... அவரை நாகார்ஜுனாவின் பாதுகாவலர் எதிர்பாராத நேரத்தில் தள்ளிவிட்ட நிலையில், அவர் தடுமாறி கீழே விழ சென்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Nagarjuna meets a fan who was pushed down by a bouncer at the airport mma

ஸ்ரீதேவி, ப்ரீதா மிஸ்ஸிங்.. அனிதா விஜயகுமார் பகிர்ந்த.. மெகா ஃபேமிலியின் ராயல் டின்னர் நைட் போட்டோஸ்!

இந்த வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலர் நாகார்ஜுனாவை கடுமையாக விமர்சித்தனர். பின்னர் நாகார்ஜுனா இது குறித்து தன்னுடைய வருத்தத்தையும் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். "இப்படி நடனத்தை தான் கவனிக்கவில்லை என்றும், இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன், என அவர் கூறி இருந்தார்".

படப்பிடிப்பு முடிந்து மீண்டும் ஹைதராபாத் திரும்ப... மீண்டும் மும்பை விமான நிலையம் வந்த நாகார்ஜுனா தன்னுடைய பாதுகாவலரால் தள்ளிவிடப்பட்ட அந்த நபரை சந்தித்து, அவரை ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக அவரின் தோல் மேல் கை போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் நாகார்ஜுனாவுடன் மற்ற சில ரசிகர்களும் புகைப்படம் எடுத்து கொண்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Nagarjuna meets a fan who was pushed down by a bouncer at the airport mma

Breaking: 37 வயதே ஆகும்... திரைப்பட நடிகர் சித்திக்கின் மகன் ரஷீன் அதிர்ச்சி மரணம்!

'குபேரா' படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள கூலி படத்திலும், முக்கிய கதாபார்த்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் நாகார்ஜுனா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கூலி இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயரிக்கிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலை 1-ந் தேதி முதல் கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios