- Home
- Gallery
- ஸ்ரீதேவி, ப்ரீதா மிஸ்ஸிங்.. அனிதா விஜயகுமார் பகிர்ந்த.. மெகா ஃபேமிலியின் ராயல் டின்னர் நைட் போட்டோஸ்!
ஸ்ரீதேவி, ப்ரீதா மிஸ்ஸிங்.. அனிதா விஜயகுமார் பகிர்ந்த.. மெகா ஃபேமிலியின் ராயல் டின்னர் நைட் போட்டோஸ்!
நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா... லண்டனுக்கு சென்ற போது, அங்கு குடும்பத்துடன் எடுத்து கொண்ட டின்னர் நைட் போடோஸை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது.

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் ஒட்டு மொத்த குடும்பமும்... ஒன்றாக ஒரே இடத்தில் கூடினால் கண்டிப்பாக அந்த இடத்தில், கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.
எனவே தான் விஜயகுமாரின் குடும்பத்தினர் எந்த ஒரு குடும்ப நிகழ்ச்சி என்றாலும் ஒன்று கூடி கொண்டாடுவதை வழக்காக வைத்துள்ளனர்.
Breaking: 37 வயதே ஆகும்... திரைப்பட நடிகர் சித்திக்கின் மகன் ரஷீன் அதிர்ச்சி மரணம்!
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயகுமாரின் பேத்தியும், அவரின் மகள் மருத்துவர் அனிதா - கோகுல கிருஷ்ணன் தம்பதியின் மகள் தியாவின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது.
தியா, லண்டலின் தன்னுடன் மருத்துவ கல்லூரியில் பயின்ற நண்பர் திலான் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். திலானின் பெற்றோர் தொழிலதிபர்கள் என கூறப்படுகிறது.
அனிதா விஜயகுமார் குடும்ப வழக்கப்படி மகளின் திருமணத்தை இந்தியாவில் நடத்த விரும்பிய நிலையில், அதற்காக சுமார் 6 மாதங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தார்.
திருமண மண்டபத்தின் டெக்கரேஷன் முதல், மகள் ஒவ்வொரு நிகழ்விற்கும் அணியும் ட்ரெஸ், நகை என... அனிதா விஜயகுமாரின் தேர்வு செய்த விஷயங்கள் பலரையும் ஆச்சர்யப்படுத்தின.
இவர்களின் திருமணம் நடந்து முடித்து 3 மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில்... திலானில் பெற்றோர் லண்டலின் உள்ள நண்பர்களுக்காக ரிசப்ஷன் ஒன்றை நடத்த திட்டமிட்டனர்.
அதன் படி இந்த மாதம், லண்டனில் நடந்த தியா - திலான் வெட்டிங் ரிசப்ஷனில்... விஜயகுமாரின் ஒட்டு மொத்த குடும்பமும் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்களை அடுத்தடுத்து அனிதா விஜயகுமார் வெளியிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.
அந்த வகையில் தான், லண்டன் சென்ற போது... அங்கு நடந்த ராயல் டின்னரில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் விஜயகுமார், அவரின் மனைவி முத்து கண்ணு, அருண் விஜய்யின் குடும்பம், கவிதா விஜயகுமார், அனிதாவின் தோழிகள், திலான் குடும்பத்தினர் ஆகியோர் உள்ளார்.
விஜயகுமாரின் மற்ற மூன்று மகள்களில், வனிதாவை எந்த விஷேஷத்திற்கும் இவர்கள் அழைப்பதில்லை என்றாலும், ஸ்ரீதேவி மற்றும் ப்ரீத்தா கலந்து கொள்வார்கள். ஆனால் லண்டலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை என்பது அனிதா வெளியிட்டுள்ள புகைப்படம் மூலம் தெரிகிறது.