Breaking: 37 வயதே ஆகும்... திரைப்பட நடிகர் சித்திக்கின் மகன் ரஷீன் அதிர்ச்சி மரணம்!
பிரபல நடிகர் சித்திக்கின் மூத்த மகன், ரஷீன் திடீர் என ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 37.
மலையாள திரையுலகில், மாம்மூட்டி, மோகன் லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் பிரபல நடிகர் சித்திக். இவரின் மகன் ரஷீன் தன்னுடைய 37 வயதில் மரணம் அடைந்துள்ள தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளியான நடிகர் சித்திக்கின் மூத்த மகன் ரஷீன், கடந்த சில வருடங்களாகவே மூச்சு திணறல் உள்ளிட்ட ஒரு சில உடல் நலப் பிரச்சனைகளுக்கு ஆளாகி அதற்க்கு உரிய சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் இவருக்கு வீட்டில் இருக்கும் போதே திடீர் என சுவாச கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவரின் குடும்பத்தினர் அனுமதித்தனர்.
ஆனால் ரஷீன் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும் இவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்திக்கும் இளைய மகன் ஷாகினும் ஒரு நடிகர் என்பது குறிப்பிடதக்கது. சித்திக் மலையாளத்தில் மட்டுமின்றி, தமிழிலும் ஜனா, ரங்கூன், வைகை எக்ஸ்பிரஸ், பாஸ்கர் ஒரு ராஸ்கல், வெந்து தணிந்த காடு, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சித்திக்கின் மகள் ரஷீன் மறைவுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
- Actor Siddique Family
- Actor Siddique's son Rasheen death
- Actor Siddique's son Rasheen dies at 37
- Actor Siddique's son Rasheen dies at young
- Actor Siddique's son Rasheen passed away
- Actor Siddique's son Rasheen passes away
- Malayalam Actor Siddique
- Malayalam Actor Siddique's son Rasheen passed away
- Rasheen Siddique Death
- Rasheen Siddique Passed Away
- Rasheen death
- Rasheen passed away
- Siddique Family
- Siddique Son Death News