MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 'இந்தியன் 2' படத்தில் நடிக்க 150 கோடி சம்பளம் வாங்கிய கமல் முதல் பாகத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

'இந்தியன் 2' படத்தில் நடிக்க 150 கோடி சம்பளம் வாங்கிய கமல் முதல் பாகத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், 'இந்தியன்' படத்தின் முதல் பாகத்தில் நடிக்க கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jun 27 2024, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என ரசிகர்களால் அழைக்கப்படும், இயக்குனர் ஷங்கர் தன்னுடைய மூன்றாவது படைப்பாக இயக்கிய திரைப்படம் தான் 'இந்தியன்'. அப்பா சேனாதிபதி என்கிற கதாபாத்திரத்திலும், மகன் சந்துரு என்கிற கதாபாத்திரத்திலும் டபுள் ரோலில் நடித்திருந்தார் உலக நாயகன். இந்த படத்தில், கமல் விடுதலை சுதந்திர போராட்டத்தில் வீரராகவும், ஊழல் செய்பவர்களை பந்தாடுபவராகவும் மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
 

27

உலக நாயகன் திரையுலக வாழ்க்கையில், அவரின் நடிப்பு திறமைக்கு மகுடம் சூட்டும் விதமாக எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும், இந்த படமும் அவர் நடித்த படங்களில் யாராலும் மறக்க முடியாத படமாக மாறியது. 

ரகுல் ப்ரீத் சிங்கை திருமணம் செய்த 4 மாதத்தில் 250 கோடி நஷ்டம்! கணவர் எடுத்த அதிரடி முடிவு..? அதிர்ச்சி தகவல்!
 

37

இந்த படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பும், வெற்றியும் தான் இரண்டாம் பாக உருவாக காரணமாக அமைந்தது மட்டும் இன்றி, பல ரசிகர்கள் எப்போது இப்படம் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்க காரணமாகவும் அமைந்துள்ளது.  மேலும் இந்தியன் படத்தின் முதல் பாகத்தரிக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை மிகப்பெரிய பலம் என கூறினால் அது மிகையல்ல.
 

47

1990 கால கட்டத்தில் இப்போதைக்கு இருக்கும் அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி இந்தியாவில் இல்லாத போதே... இந்த படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை தத்ரூபமாக காட்டிய ஷங்கர், இரண்டாம் பாகத்திற்காக பல கோடி செலவு செய்து ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றி உள்ளார். 

Kalki 2898AD Review : கலக்கியதா? காலை வாரியதா? பிரபாஸின் ‘கல்கி 2898AD’ திரைப்படம் - விமர்சனம் இதோ
 

57

மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி படம் மீதான ஆவலையும் தூண்டி உள்ளது. கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்க... தன்னுடைய சம்பளமாக ரூ.150 கோடி பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், முதல் பாகத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் பெற்றிருப்பார் என்கிற தகவல் யுகத்தின் அடிப்படையில் வெளியாகி உள்ளது.
 

67

அதாவது தமிழ் சினிமாவில் முதல் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் ராஜ்கிரண் தான். 1988-ஆம் ஆண்டு வெளியான மாணிக்கம் படத்திற்காக வாங்கி இருந்தார். அப்போது ரஜினி - கமல் போன்ற நடிகர்கள் 50 லட்சமே சம்பளமாக வாங்கி வந்துள்ளனர். பின்னரே மெல்ல மெல்ல தங்களின் சம்பளத்தை உயர்த்த துவங்கினர்.

மனைவி சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு BMW சொகுசு காரை பரிசாக வழங்கிய ஜாகீர் இக்பால்.. விலை இத்தனை கோடியா?
 

77

அதே போல் 1990 முதல் 2000 வரையிலும் நடிகர்களுக்கான சம்பளம் அதிக பட்சம் 3 கோடி வரை தான் கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த சில வருடங்களாக தான் 100 கோடிக்கு மிகாமல் சம்பளம் பெற துவங்கினர் முன்னணி நடிகர்கள். கமல் நடத்த இந்தியன் திரைப்படம் 1996-ஆம் ஆண்டு வெளியான நிலையில் அப்போதைக்கு இவரின் சம்பளமாக 1.5 கோடி கொடுக்க பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஒட்டு மொத்த பட்ஜெட்டே 15 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஏ. ஆர். ரகுமான்
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved