- Home
- Gallery
- ரகுல் ப்ரீத் சிங்கை திருமணம் செய்த 4 மாதத்தில் 250 கோடி நஷ்டம்! கணவர் எடுத்த அதிரடி முடிவு..? அதிர்ச்சி தகவல்!
ரகுல் ப்ரீத் சிங்கை திருமணம் செய்த 4 மாதத்தில் 250 கோடி நஷ்டம்! கணவர் எடுத்த அதிரடி முடிவு..? அதிர்ச்சி தகவல்!
பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், இதனை சரிக்கட்ட 7 மாடி கட்டிடத்தை விற்றுவிட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக அறியப்படும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்த கையேடு, பாலிவுட் பட நடிகரும் - தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி அன்று கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் சவுத் எங்கிற நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
Rakul Preeth Singh
திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் பிசியாக இருந்ததால், கடந்த மாதம் தான் இருவரும் ஹனி மூன் கொண்டாட வெளிநாட்டுக்கு சென்ற நிலையில், இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் கணவர் ஜாக்கி பக்னானி மிகப்பெரிய நிதி பிரச்சனையில் சிக்கி தனக்கு சொந்தமான 7 மாடி கட்டிடத்தை விற்பனை செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஜாக்கி பக்னானி, இந்தி படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, வாசு பக்னானியின் பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இந்நிறுவனம் மூலம் ‘கூலி நம்பர் 1’, ‘ஹீரோ நம்பர் 1’, ‘பீவி நம்பர் 1’ உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுளளது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த நிறுவனம் தயாரிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஜாக்கி பக்னானி, 250 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளார்.
இதனை சரிக்கட்டும் விதமாக ஜாக்கி பக்னானிக்கு சொந்தமாக இருந்த 7 மாட்டி கட்டிடத்தை விற்பனை செய்துள்ளார். மேலும் அவரின் அலுவலகம் தற்போது மும்பை ஜுஹு பகுதியில் 2 படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'முதல்வன்' படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு பதில் நடிக்க இருந்த ஹீரோயின் யார் தெரியுமா? காரணம் இதுதான்!