விமான நிலையத்தில் நடிகர் நாகார்ஜுனாவை காண வந்த முதியவர் ஒருவர் தரதரவென இழுத்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. அவர் நடிப்பில் தற்போது குபேரா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாகவும், நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். குபேரா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுதவிர ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள கூலி படத்திலும் முக்கிய கதாபார்த்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் நாகார்ஜுனா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயரிக்கிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலை 1-ந் தேதி முதல் கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... என்ன பொசுக்குனு இப்படி பண்ணிடாங்க! புயலை கிளப்பிய ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி - அப்போ விவாகரத்து கன்பார்மா?

இதனிடையே குபேரா பட ஷூட்டிங்கில் தற்போது பிசியாக உள்ள நடிகர் நாகார்ஜுனா, அதில் கலந்துகொள்வதற்காக நடிகர் தனுஷ் உடன் விமான நிலையம் வந்திருந்தார். அப்போது அங்கு அவரை காண வந்த முதியவர் ஒருவர், நாகார்ஜுனா அருகில் நெருங்கியதும், அருகில் இருந்த பவுன்சர் ஒருவர் அந்த முதியவரை தரதரவென இழுத்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றார். இதை நாகார்ஜுனா பார்க்காவிட்டாலும் அவர் பின்னால் வந்த தனுஷ் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

Scroll to load tweet…

இதுகுறித்து வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் நாகார்ஜுனாவை கடுமையாக சாடி வந்தனர். இதையடுத்து எக்ஸ் தள பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றையும் போட்டுள்ளார் நாகார்ஜுனா. இப்போது தான் அது என் கவனத்துக்கு வந்தது. கண்டிப்பாக இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது. அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... மல்லையா மகனுக்கு லண்டனில் டும் டும் டும்... காதலியை கரம்பிடித்தார் சித்தார்த் - வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்