சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்து நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, மோகன் பாபு, பரேஷ் ராவல், பூ ராம், பிரகாஷ் வைத்தியநாதன், அச்யுத் குமார், காளி வெங்கட் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ரா கோபிநாத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்தது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

#SooraraiPottru Hindi songs recording on progress … coming up with fresh songs for it … super excited @Sudha_Kongara@akshaykumar@Suriya_offl@Abundantia_Ent@rajsekarpandianpic.twitter.com/7sZf4vUBIt

Scroll to load tweet…

வேறலெவலில் மிமிக்ரி செய்த அமுதவாணன் மகன்... குலுங்கி குலுங்கி சிரித்த பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் - வைரல் வீடியோ இதோ

சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை ஆகிய 5 பிரிவுகளில் தேசிய விருது பெற்றது. மேலும், இந்தப் படம் 78ஆவது கோல்டன் குளோப் விருதும் பெற்றது. தமிழில் ஏகபோக வரவேற்பு பெற்ற சூரரைப் போற்று படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சுதா கொங்கராதான் அதற்கான வேலைகளை செய்து வருகிறார். இந்தப் படத்தில் சூர்யா ரோலில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சூர்யா இணை தயாரிப்பாளராக சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் இணைந்துள்ளார்.

எம்.ஜி.ஆர்-ஐ என் தந்தை சுட்டது ஏன்?... கருணாநிதி மட்டும் இல்லேனா அவர ஜெயில்லயே முடிச்சிருப்பாங்க - ராதா ரவி

இந்த நிலையில், இந்தப் படம் குறித்து இசைமைப்பாளர் ஜிவி பிரகாஷ் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். சூரரைப் போற்று படத்திற்கு ஹிந்தி ரீமேக்கிற்கான இசை அமைக்கும் பணி தொடங்கிய்யுள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார். விரைவில் படத்திற்கான புதிய பாடல் வெளிவரும். அதிகளவில் ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அப்போது அவருடன் இயக்குநர் சுதா கொங்கரா இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் ஷோவுக்கு நீ தகுதியே இல்ல... என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு - கணவரின் பேச்சால் ஷாக்கான மைனா

Also Read This: விஜய்யின் வாரிசு டிரைலர் எப்போது வருகிறது?