விஜய்யின் வாரிசு டிரைலர் எப்போது வருகிறது?

தளபதி விஜய்யின் வாரிசு படத்தின் டிரைலர் வரும் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thalapathy Vijay Varisu Movie Trailer will release on new year 2023 day?

இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் வாரிசு. தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். மேலும், சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, சம்யுக்தா, ஆனந்தராஜ்,  கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

அரசியலில் எண்ட்ரி கொடுப்பாரா விஜய்? - தாய் ஷோபா சந்திரசேகர் பேட்டி

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 ஆம் தேதி வாரிசு படம் திரைக்கு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். வாரிசு படத்தில் இடம் பெற்றிருந்த ரஞ்சிதமே, தீ தளபதி பாடல், சோல் ஆஃப் வாரிசு ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில், இசை வெளியீட்டு விழாவின் போது ஜிமிக்கி பொண்ணு, வா தலைவா ஆகிய பாடல்கள் வெளியாகின.

எம்.ஜி.ஆர்-ஐ என் தந்தை சுட்டது ஏன்?... கருணாநிதி மட்டும் இல்லேனா அவர ஜெயில்லயே முடிச்சிருப்பாங்க - ராதா ரவி

ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் வெளியீட்டிற்கு முன்னதாக மொத்தமாக ரூ.437 கோடி வரையில் வசூல் குவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வாரிசு படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிக்பாஸ் ஷோவுக்கு நீ தகுதியே இல்ல... என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு - கணவரின் பேச்சால் ஷாக்கான மைனா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios