டொயோட்டா வெல்ஃபயர், லேண்ட் க்ரூஸர் வரிசையில் புதுசா ரூ. 5 கோடிக்கு ரேஞ்ச் ரோவர் கார் வாங்கிய மோகன்லால்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் எத்தனையோ கார்கள் வைத்திருந்தாலும் தற்போது ஒயிட் நிறத்தில் புதிதாக பல ஆடம்பர வசதிகள் கொண்ட ரேஞ்ச் ரோவர் எஸ்யுவி கார் ஒன்றையும் வாங்கியுள்ளார்.

Mohanlal Buy a New Range Rover Car Worth 5 crore

மலையாள சினிமாவில் சுப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 350க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் ராம் பார்ட் 1, மலைக்கோட்டை வாலிபன், ஒளவும் தீரவும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகர் மட்டுமின்றி மோகன்லால் கார் பிரியரும் கூட. அவர், ஏராளமான ஸ்போர்ட்டி கார்களை வைத்துள்ளார். ரூ. 2 கோடி மதிப்பிலான டொயோட்டா லேண்ட் க்ரூஸர், ரூ.80 லட்சம் மதிப்புள்ளா மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்350, ரூ.1 கோடி மதிப்பிலான டொயோட்டா வெல்ஃபயர் மற்றும் ரூ.3 கோடி மதிப்பிலான லம்போர்கினி உருஸ் ஆகிய கார்களை பயன்படுத்தி வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள 'கஸ்டடி' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!

இந்தப் பட்டியலில் தற்போது புதிய கார் ஒன்றையும் இணைத்துள்ளார். ஆம், ஒயிட் நிறம் கொண்ட ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார். அந்த புதிய ஒயிட் நிறம் கொண்ட ரேஞ்ச் ரோவர் காரின் விலை ரூ.5 கோடியாம். அப்படி அந்த காரில் என்னென இருக்கிறது என்று கேட்கிறீர்களா? மோகன்லால் வாங்கிய இந்த ஒயிட் லேண்ட் க்ரூஸர் ஆட்டோ பையோகிராபி 4.4 V8 கார் 2996 சிசி, 2997 சிசி, 4367 சிசி, 4395 சிசி ஆகிய 5 வேரியண்டுகளில் கிடைக்கிறது. மோகன்லால் 2997 சிசி டீசல் என்ஜின் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட பெட்ரோல் என்ஜின்  மாடல் காரை வாங்கியுள்ளார்.  இந்த காரானது  100 கிமீ என்ற வேகத்தை வெறும் 6.1 விநாடிகளில் எட்டிவிடுமாம். இந்த மாடல் காரானது, டைனமிக் ரெஸ்பான்ஸூடன் கூடிய மின்சா ஏர் சஸ்பென்ஷன், இரட்டை டர்போசார்ஜரையும் கொண்டுள்ளது.

குட்டியோடு கியூட் ஸ்மைல போட்டு சாச்சிபுட்டாளே... கருப்பு சேலையில் இருக்கும் பிரியா பவானி ஷங்கரின் ஹாட் போஸ்!

 

 

மேலும், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யக் கூடிய வகையில் ஸ்டீயரிங், பவர் ஜன்னல்கள், பவர் பூட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொச்சியில் உள்ள குண்டனூர் பகுதியில் மோகன்லால் புதிதாக வீடு ஒன்றையும் வாங்கியிருக்கிறார். அந்த வீட்டில் வைத்து, இந்த புதிய லேண்ட் க்ரூஸர் கார் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது மோகன் லாலின் மனைவி சுசித்ராவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'இந்தியன் 2' மிடில் ஏஜ் சேனாபதி... லுக்கில் தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிடும் ஆண்டவர்! சூடான இணையதளம்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios