Asianet News TamilAsianet News Tamil

'இந்தியன் 2' மிடில் ஏஜ் சேனாபதி... லுக்கில் தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிடும் ஆண்டவர்! சூடான இணையதளம்!

நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிற்காக, தென்னாப்பிரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கு எடுத்து கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வேற லெவலுக்கு பார்த்து, ரசிக்கப்பட்டு வருகிறது.
 

kamal hassan stylish look in south africa photos blast internet
Author
First Published Apr 11, 2023, 12:40 AM IST | Last Updated Apr 11, 2023, 12:40 AM IST

'விக்ரம்' படத்தின் மெகா ஹிட் வெற்றிக்கு பின்னர்.... திரையுலகில் நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் ஃபுல் எனர்ஜியோடு இயக்கி கொண்டிருக்கிறார் கமல் ஹாசன். வரிசையாக 5 முன்னணி நடிகர்களை வைத்து இயக்கும் திட்டத்தில் கமல் உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், சில இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் இவர் நடிக்க கால் ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் தற்போது பல போராட்டங்களுக்கு பின்னர் மீண்டும் கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இப்போது ஒருவழியாக இறுதி கட்டத்தையும் எட்டியுள்ளது.  சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கிற்காக தைவான் சென்றுள்ளதாக, இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல் என இருவருமே புகைப்படங்கள் வெளியிட்டு அறிவித்த நிலையில், தைவானில் எடுக்க வேண்டிய காட்சி எடுத்து முடித்து விட்டதாகவும் இதை தொடர்ந்து, தென்னாபிரிக்காவுக்கு படக்குழுவினர் படையெடுத்துள்ளனர்.

குட்டியோடு கியூட் ஸ்மைல போட்டு சாச்சிபுட்டாளே... கருப்பு சேலையில் இருக்கும் பிரியா பவானி ஷங்கரின் ஹாட் போஸ்!

kamal hassan stylish look in south africa photos blast internet

அந்த வகையில் தற்போது தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க்கில் இந்தியன் 2 படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். இங்கு அதிரடியான ரயில் ஆக்ஷன் சீன் படமாக்கப்பட உள்ளதாகவும், தொடர்ந்து 12 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சூட்டிங்கை முடித்துக் கொண்டு படக்குழுவினர் நாடு திரும்பவுள்ளனர் என கூறப்படுகிறது. 

போதை தலைக்கேறி... வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா ராய்! கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஓவர் அலப்பறை!

இந்நிலையில், கமல்ஹாசன் தென்னாபிரிக்காவில் மிடில் ஏஜ் சேனாதிபதி லுக்கில் உயர் ரக கேமராவோடு வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும், ஒரே கல்லால் ஆன கடம் போன்று இசை எழுப்ப கூடிய, ம்யூசிக் இன்ஸ்ட்ருமென்ட்டில் மிகவும் ரிலாக்ஸாக, கமல் வாசிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  இந்தியன் 2 படத்தில், விக்ரம் படத்தை தொடர்ந்து மீண்டும் காளிதாஸ் ஜெயராமும் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

kamal hassan stylish look in south africa photos blast internet

இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக, நடிகை காஜல் அகர்வால், நடிக்கிறார். மேலும்  சித்தார்த், ராகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியன், மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவு மற்றும் ஸ்ரீகர் பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

இந்த மனசு தான் சார் கடவுள்..! நடிகர் சரத்குமார் செய்த செயலுக்கு குவியும் வாழ்த்து..!
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhuvi (@bujji5749)

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios