- Home
- Cinema
- ஆரோக்கியமான போட்டி.. ஆச்சரியமான ஹிட்! எம்.ஜி.ஆர் - சிவாஜி மோதலில் உருவான காவியங்கள்.. திரையுலகின் பொற்கால ரகசியங்கள்!
ஆரோக்கியமான போட்டி.. ஆச்சரியமான ஹிட்! எம்.ஜி.ஆர் - சிவாஜி மோதலில் உருவான காவியங்கள்.. திரையுலகின் பொற்கால ரகசியங்கள்!
MGR vs Sivaji Ganesan Box office Hit Movie Karnan vs Aayirathil Oruvan : என்னதான் நண்பர்களாக இருந்தாலும் சிவாஜியின் கர்ணன் படத்திற்கு போட்டியாக எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரிலீஸ் செய்ததாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர் - சிவாஜி மோதலில் உருவான காவியங்கள்
தமிழ் சினிமாவில் நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டே இருப்பார்கள் இவர்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கா. அந்த காலத்தில் தொடங்கி தற்போது வரை இருக்கிறது. ஆனால் சினிமாவில் போட்டி இருக்குமே தவிர அவர்களுக்குள் நல்ல நட்பு தான் இருந்திருக்கிறது. அதேபோல் தான் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் திரையில் போட்டி போட்டுக் கொண்டாலும் ஒருவருக்கொருவர் நட்பாக பழகி வந்தனர். இதனை விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான போட்டி.. ஆச்சரியமான ஹிட்
1950களின் நடுப்பகுதி முதல் 1970களின் இறுதி வரை,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் தமிழ் சினிமாவில் போட்டித்தன்மை வாய்ந்த இரு பெரும் துருவங்களாக விளங்கினர். சிவாஜி நடிப்பிலும் உணர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலும் ஆதிக்கம் செலுத்தியபோது, எம்ஜிஆர் அதிரடி மற்றும் மக்கள் நாயகன் பிம்பத்துடன் ரசிகர்களைக் கவர்ந்தார். இவர்கள் திரைத்துறையில் போட்டியாளர்களாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்களாகவே இருந்தனர். ஒவ்வொருவரும் மேடைகளிலும் சரி வாழ்க்கையிலும் சரி அண்ணன் தம்பி போல் பழகி வந்தனர்.
திரைப்படப் போட்டி:
1952-1978 காலகட்டத்தில், இருவரும் பல படங்களில் நேருக்கு நேர் மோதினர். சிவாஜி அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்தார். அதே சமயம் எம்ஜிஆர் மக்கள் மத்தியில் ஒரு பிரத்யேக ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். மக்கள் செல்வன் புரட்சித்தலைவர் எங்க வீட்டு செல்ல பிள்ளை என்று பல பட்டங்களை பெற்று மக்கள் மனதில் நீங்க அதை இடத்தையும் வீட்டில் ஒருவராகவும் வாழ்ந்து வந்தார். இருவரும் படம் பெயர்களிலேயே மோதிக்கொண்டனர் என்று கூறப்படுகிறது. ஒரு தலைப்புகளும் நேர் மோது கொள்வது போலவே அமைந்திருக்கும். வெளியிடத்திலும் மேடையிலோ ஒருவருக்கொருவர் கட்டித் தழுவிக் கொண்டு முத்தம் கொடுத்து அன்பினை வெளிப்படுத்துவது போல் இருப்பார்கள். வெற்றி விகிதம்: 1952-1978 காலகட்டத்தில், சிவாஜி 199 படங்களில் நடித்து, 80 படங்கள் 100 நாட்களைக் கடந்து, 40.2% வெற்றி விகிதத்தைப் பெற்றார். அதே காலகட்டத்தில், எம்ஜிஆர் 110 படங்களில் நடித்து, 39 படங்கள் 100 நாட்களைக் கடந்து, 35.4% வெற்றி விகிதத்தைப் பெற்றார்.
திரைப்பயணம் :
சிவாஜி பல்வேறு வேடங்களில் நடித்து "நடிகர் திலகம்" என்று அழைக்கப்பட்டார். காதல், அண்ணன் தங்கை பாசம், சமூக ரீதியான படங்கள், 9 உருவ அமைப்புகளைக் கொண்ட படங்கள், நகைச்சுவை இங்கு அனைத்திலும் சகலக வல்லமை வாய்ந்தவர். எம்ஜிஆர், சண்டை மற்றும் சமூக நீதி சார்ந்த கதைகளில் நடித்து "புரட்சி நடிகர்" என பட்டம் பெற்றார். மக்களுக்கு உதவி செய்யும் வள்ளல், அருமையான வாழ் வீச்சு, நடனம், இனிமையான குரல், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று அனைத்திலும் சிறந்து விளங்கியவர் எம்.ஜி. ராமச்சந்திரன்.
கூண்டுக்கிளி திரைப்படம்:
1954-ல் வெளியான 'கூண்டுக்கிளி'என்னும் திரைப்படம் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோர் இணைந்து நடித்த ஒரேயொரு திரைப்படம். இரு முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்குனர் ராமண்ணா. இத்திரைப்படம் வணிகரீதியான வசூலை வாரி குவிக்கும் என்று நினைத்தார் ஆனால் நினைத்த அளவிற்கு படம் வசூலை பெறவில்லை. தோல்வியிலேயே முடிந்தது. பிறகு இருவரும் ஒன்று சேர்ந்து அடிக்க வேண்டும் என்ற முடிவை கைவிட்டனர் இதுவே இவர்கள் ஒன்று சேர்ந்து நடித்த ஒரே ஒரு திரைப்படம் என்று கூறப்படுகிறது.
எம்ஜிஆர்- சிவாஜி நட்பு:
எம்ஜிஆர், சிவாஜி இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், படங்களில் ஒருவரை விட ஒருவர் பெரிய ஆளாகத் தெரிய வேண்டும் என்பதில் கடும் போட்டி இருந்தது. இதற்காகவே சிவாஜி நடித்த 'கர்ணன்' படத்திற்குப் போட்டியாக எம்.ஜி.ஆர் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை ரிலீஸ் செய்ததாக ஒரு தகவல் உண்டு. படத்தில் மட்டும் தான் இவர்களுக்கு போட்டி இருந்ததை தவிர நிஜ வாழ்க்கையில் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இன்றும் இவர்களது பாசம் அன்பு தமிழ் சினிமாவில் நீங்காத இடத்தை பெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.