பிரபல தமிழ் பட நடிகை மியா ஜார்ஜுக்கு இந்த லாக் டவுன் நேரத்தில், அவசர அவசரமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: 77 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கும் இளையராஜா! இசை பயணத்தில் மறக்க முடியாத அரிய புகைப்பட தொகுப்பு!
 

மலையாள திரையுலகில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு ஸ்மால் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இதை தொடர்ந்து, மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், தமிழில் நடிகர் ஆர்யா அவருடைய சகோதரர், 'சத்யாவை' வைத்து தயாரித்த ’அமர காவியம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்தில் பள்ளி மாணவியாக நடித்த இவர், பின் சேலை கட்டிய கிளியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார். 

இந்த படத்தை அடுத்து, விஷ்ணு விஷால் நடித்த ’இன்று நேற்று நாளை’ சசிகுமார் நடித்த ’வெற்றிவேல்’ தினேஷ் நடித்த ’ஒரு நாள் கூத்து’ விஜய் ஆண்டனி நடித்த ’எமன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் விக்ரம் நடித்து வரும், 'கோப்ரா' திரைப்படம் உட்பட, இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார். 

மேலும் செய்திகள்: ஸ்லீவ்லெஸ் உடையில்... சிம்புவுடன் ரொமான்ஸ் செய்த சமந்தா! தீயாய் பரவும் புகைப்படம்!
 

இந்த நிலையில் நடிகை மீரா ஜார்ஜூக்கும் அஸ்வின் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து அஷ்வினுக்கும் - மியா ஜார்ஜுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடந்துள்ளது. இதில், இருவருடைய நெருங்கிய உறவினர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்களுடைய திருமணம், வரும் செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் - மற்றும் மலையாளத்தில், பட வாய்ப்புகள் குறைந்து வருவதாலும், அம்மணி 28 வயதை கடந்து விட்டதாலும், கிடைத்த நல்ல வரனை தட்டி கழிக்க வேண்டாம் என திருமணத்திற்கு மியா ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. எனவே இவரை திருமணம் செய்து கொள்ள உள்ள அந்த நபர் யார் என்பதை தெரிந்து கொள்வதிலும் மிகவும் ஆர்வமாக உள்ளனர் இவருடைய ரசிகர்கள்.