77 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கும் இளையராஜா! இசை பயணத்தில் மறக்க முடியாத அரிய புகைப்பட தொகுப்பு!
இசை கடவுள், என கோலிவுட் இசை கலைஞர்களால் அன்போடு அழைக்கப்படும், இசை ஞானி இளையராஜா அவர்களின் 77 ஆவது பிறந்த நாள் இன்று....
இவருடைய இந்த மாபெரும் இசை பயணத்தில் மறக்க முடியாத, நினைவுகளாய் இருக்கும், சில... புகைப்படங்கள் பற்றிய தொகுப்பு இதோ:
பிரபல பின்னணி பாடகி சித்ராவின் இசை பயணத்தில், மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியவை, இளைய ராஜ அவருக்கு கொடுத்த வாய்ப்புகள். 'சிந்தி பைரவி' படத்தில் இவர் பாடிய நான் ஒரு சிந்து பாடல் இவருக்கு பல விருதுகளை பெற்று தந்தது. மேலும், நின்னுக்கோரி வரணும், குழலூதும் கண்ணனுக்கு, பாடறியே படிப்பறியே' போன்று பல பாடல்களை சொல்லி கொண்டே போகலாம். அப்படி ஒரு முறை, சித்ராவிற்கு பாடலை பற்றி, இளைய ராஜா விளக்கும் போது எடுத்த அரிய புகைப்படம் இது...
இளைய ராஜா வெளியில் பெரிதாக யாருடனும் அதிகம் பேச மாட்டார் என்றே நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் இவருடைய இசை குழுவில் உள்ள சிலருடன் மட்டும் எப்போதும் நன்றாக பேசும் குணம் உடையவர். இது இவரை பற்றி நன்கு அறிந்த சிலருக்கு மட்டுமே தெரியும். தன்னுடைய இசை குழுவினருடன் இளைய ராஜா எடுத்து கொண்ட புகைப்படம் இது.
இளைய ராஜாவின் அன்பு நண்பர்களில் ஒருவர், இயக்குனர் பாரதி ராஜா. இவர்களின் இளைய வயதில், இளைய ராஜா ஹார்மோனியம் வாசிக்க, பாரதி ராஜா கிட்டார் வாசித்த புகைப்படம் இது. பார்க்கவே பொறாமைப்பட வைக்கிறது இவர்களது நட்பின் குறும்பு.
நீ பாடி யார் கேக்குறது.... அன்பு நண்பர் பாரதி ராஜா பாடல் பாட, அதனை குறும்புத்தனத்தோடு கலாய்க்கும் விதமாக காதை மூடி கொண்டு போஸ் கொடுக்கிறார் இளைய ராஜா.
பாடல் வரிகளால்.... இளையராஜாவின் இசைக்கு வலிமை சேர்த்த பாடலாசிரியர்களில் ஒருவர் வாலி. தன்னுடைய எழுத்துக்கு உயிர் கொடுத்து... மக்களின் மனதில் கொண்டு போய் சேர்த்த ராஜாவிற்கு முத்தம் கொடுத்த அன்பை வெளிப்படுத்திய வாலியின் புகைப்படம் இது
பாடகர் யேசுதாஸ், சித்ராவுடன்... ரெகார்டிங் போது இளையராஜா எடுத்து கொண்ட அரிய புகைப்படம். அப்போது செம்ம யங் டீம் இது.
ஆரம்பத்தில் இருந்து, எளிமையை மற்றுமே தன்னுடைய கொள்கையாய் கொண்டு, பகட்டு - பந்தா இல்லாமல் வாழ்ந்து வரும் இசை ஞானி.
உலக நாயகன் கமல்ஹாசனுடன் இளைய ராஜா பேசி கொண்டிருக்கும் புகைப்படம். கமலஹாசனின் பல படங்களுக்கு வெற்றி பாடங்களையும் கொடுத்துள்ளனர் இசை ஞானி. குறிப்பாக, நாயகன் படத்தில் இடம்பெற்ற தென்பாண்டி சீமையிலே, கண்மணி அன்போடு காதலன் போன்றவை தற்போது வரை பலரது ஃபேவரைட் பாடல்களில் ஒன்று.