நடிகை சமந்தா, சிம்புவுடன் ஸ்லீவ்லெஸ் உடையில், ஹாட் கவர்ச்சியில் ரொமான்ஸ் செய்வது போல் வெளியாகியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, திருமணத்திற்கு பிறகும் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் திருமணத்திற்கு பின் வெளியான, 'ரங்கஸ்தலம்', 'மகாநடி', 'சூப்பர் டீலக்ஸ்', 'மஜிலி', 'ஓ பேபி' போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.

சமீபத்தில், இவர் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96 ' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தமிழில் வெற்றி பெற்ற அளவிற்கு தெலுங்கில் வெற்றிபெறவில்லை என்றாலும், இவருடைய நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் சமந்தா இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக முதலில் கமிட் ஆனவர் நடிகை சமந்தா தான். இருவரையும் வைத்து போட்டோ ஷூட்டும் நடந்தது. பின் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தாமதமாகவே இந்த படத்தில் இருந்து சமந்தா விலகும் சூழல் உருவானது. பிறகு தான் சமந்தாவிற்கு பதில் நடிகை மஞ்சுமா மோகன் இந்த படத்தில் நடித்தார்.

தற்போது இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படம் சமூக வளைத்ததில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் சமந்தா, தற்போது இருப்பதை விட, மிகவும் அழகாகவும் கவர்ச்சி கரமாகவும் உள்ளார். அதே போல்... நடிகர் சிம்புவும், மிகவும் எங் லுக்கில், தாடி மீசை இல்லாமல் செம்ம ஸ்டைலிஷாக உள்ளார்.

சமந்தா இந்த படத்தில் கமிட் ஆகி நடிப்பதற்கு முன், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான, 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சிம்புவுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே படத்தில், சமந்தாவின் கணவர் நாகசைதன்யாவும் நடித்திருந்தார்.  

அந்த புகைப்படம் இதோ: